Header Ads



3 மணி நேரத்துக்கு முன்பே போர் நிறுத்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது - இஸ்ரேல் குற்றச்சாட்டு


3 மணி நேரத்துக்கு முன்பே போர் நிறுத்தத்தை பாலஸ்தீனியவாதிகள் மீறிவிட்டனர் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனம் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் க்கும் இடையேகடந்த ஒரு மாதமாக போர் நடந்தது. அதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேரும், இஸ்ரேலை சேர்ந்த 66 பேரும் பலியாகினர்.

அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையின் தீவிர முயற்சி தற்போது 72 மணி நேர போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அதை மேலும் நீடிக்க எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் இருதரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த போர் நிறுத்தம் இன்று காலை 8 மணியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால் போர் நிறுத்தத்தை ஹமாஸ்  மீறி விட்டதாக இஸ்ரேல் புகார் கூறியுள்ளது.

போர் நிறுத்தம் முடிவுக்கு 3 மணி நேரத்துக்கு முன்னதாகவே ஹமாஸ் தெற்கு இஸ்ரேல் பகுதியில் 2 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஆனால் அவை வெட்ட வெளியில் விழுந்ததால் உயிர் சேதம் எதுவும் இல்லை என இஸ்ரேல் ராணுவம் ‘டுவிட்டர்’ இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹமாஸ் தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இருதரப்பிலும் ஒப்பந்தம் ஏற்படவில்லை என கூறினர்.

No comments

Powered by Blogger.