Header Ads



பிரேசில், பெரு, சிலி, இக்வடோர், எல்சல்வடோர் நாடுகளின் இஸ்ரேலுக்கான தூதுவர்கள் வாபஸ்

இஸ்ரேலின் காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்தா வது லத்தீன் அமெரிக்க நாடாக எல் சல்வடோரும் தனது இஸ்ரேல் நாட்டுக்கான தூதுவரை திருப்பி அழைத்துக்கொண்டது. பிரேசில், பெரு, சிலி மற்றும் இக்வடோர் நாடுகளை பின்பற்றியே எல்சல்வடோர் இந்த நடவடிக்கையை எடுத்தது. 

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலில் அங்கம் வகிக்கும் பிரேஸில், இஸ்ரேல் மீது விசாரணை நடத்த கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில்; ஆதரவாக வாக்களித்திருந்தது. இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக பிரேஸில் ஜனாதிபதி டில்மா ருஸ்ஸப் குற்றம் சாட்டியிருந்தார். 

காசா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை சர்வதேச மனி தாபிமான சட்டத்தின் அடிப்படையையே மதிக்கவில்லை என்று சிலி நாடு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.