Header Ads



காஸா முஸ்லிம்களை கொலைசெய்ய, இஸ்ரேலிலுள்ள அமெரிக்க ஆயுதக்கிடங்கு திறந்துவைப்பு

காசா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க ஆயுதக்கிடங்கில் இருந்து ஆயுதங்களை பெற அமெரிக்கா அனுமதி அளித்திருப்பதோடு குறித்த ஆயுதக்கிடங்கிற்கு கடந்த வாரத்தில் கையெறி குண்டுகள் மற்றும் பீரங்கிக் குண்டுகளை விநியோகித்ததை அமெரிக்கா உறுதிசெய்துள்ளது.

அமெரிக்காவின் ஆயுதத் தேவைக்காக இஸ்ரேலுக்குள் இந்த ஆயுதக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்களை அவசர நிலைகளில் பயன்படுத்த இஸ்ரேலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவசர நிலையின்றி 10 தினங்களுக்கு முன்னரே இந்த கிடங்கில் இருந்து ஆயுதங்களை பெற இஸ்ரேல் அனுமதி கோரியுள்ளது. 

'இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா பொறுப்புகூற வேண்டும். இஸ்ரேலின் அபிவிருத்திக்கு உதவுவது மற்றும் அதன் சுயபாதுகாப்பு திறனை தயார் நிலையில் வைத்திருப்பது அமெரிக்க தேசிய நலனுக்கு முக்கியமானதாகும்" என்று அமெரிக்க பாதுகாப்பு மைய மான பென்டகனின் பேச்சாளர் ரியர் அட்மிரல் ஜோன் கிர்பி குறிப் பிட்டார். 

மறுபுறத்தில் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு முறைக்கு மில் லியன் டொலர்களை மேலதிக நிதி யாக வழங்க அமெரிக்க கொங் கிரஸ் அவையில் அனுமதி பெற அந்நாட்டு அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர்.

1 comment:

  1. Unglalai america paazukaakkum muslimgalai allaah pazuhaappaan. Neeye engalukku pozumaanavan.

    ReplyDelete

Powered by Blogger.