Header Ads



''முஸ்லிம் போராளிகளின் வீரம்'' இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடாத்த முயற்சி

காஸா பகுதியில் இருந்து வந்த ஆளில்லா தாக்குதல் விமானத்தை நடுவானிலேயே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பாலஸ்தீனத்தின் காஸாவில் இருந்து இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஆஷ்டோட் நகரை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது. அந்த விமானத்தை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியது'' என்றார்.

காஸா மீது இஸ்ரேல் தரைப்படை மற்றும் விமானப்படை கடந்த ஒரு வாரமாக கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதன்முதலாக ஆளில்லா விமானம் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.