Header Ads



நான் தலைவராக இருந்திருந்தால், ஹக்கீமுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பேன் - ஞானசார

இலங்கை அரசாங்கத்தில் இருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீமை வெளியேற்ற வேண்டும் என்று பொதுபலசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் பௌத்த தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று ஹக்கீம் அண்மையில் விடுத்த கோரிக்கையை மையப்படுத்தியே பொதுபலசேனாவின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஹக்கீம் பௌத்தர்களையும் பௌத்த பிக்குகளையும் விமர்சிப்பதையிட்டு ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் வெட்கப்பட வேண்டும் என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தாம் தலைவராக இருந்திருந்தால், ஹக்கீமுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் கலகொட குறிப்பிட்டார்.

இனவாதத்தை தூண்டிவிட்டு முஸ்லிம்களை ஒன்றிணைக்க ஹக்கீம் முயற்சிக்கிறார்.

அளுத்கமையில் பேரணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோரை யார் தாக்கினார்கள் என்று இதன் போது கலகொட தேரர் கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் ஹக்கீம் ஏன் இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுகிறார் என்று தெரியவில்லை. இவ்வாறான ஒருவரை நீண்ட நாட்கள் அரசாங்கத்தில் வைத்திருக்கக்கூடாது என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தினார்.

2 comments:

  1. அளுத்கம சம்பவத்திற்குப் பின்னரும் கூட வன்முறையாளர்களுக்கு பாதகாப்பு வழங்கும் கலாசாரமே கண் முன்னே காணப்படுகின்றது. மன்னிக்க முடியாத குற்றங்களை இழைத்துவிட்டு இன்றும் ஊடகங்களிலும் நேரிலும் சவால்விடும் வகையில் ஒரு குழு காணப்படுவதும் இன்னனொரு வகையில் ஒருசில அரசியல்வாதிகள் அவர்களை அரவணைத்து அவர்களை ஊக்கப்படுத்துவது போன்ற நிலைமைகளை யார்தான் ஏற்றுக் கொள்வர்.

    ReplyDelete
  2. If I was in Sl, I will shoot yu.

    ReplyDelete

Powered by Blogger.