அன்பு + கருணையில் சிங்கள இனத்தை விட, சிறந்த இனமொன்று உலகில் வேறில்லை - பைசர் முஸ்தபா
நாட்டில் மீண்டும் போரை வெடிக்கச் செய்ய சதி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற பயிற்சி நெறியொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன, மதவாத விச விதைகளை சிலர் விதைத்து வருகின்றனர். சுயலாப நோக்கங்களுக்காக இன மதப் பிரச்சினைகளை தூண்டக் கூடாது.
இனத்திற்காக மதத்திற்காக எவரேனும் ஒருவரை தாக்கினால்> தாக்குபவர் மிருகத்தை விடவும் இழிவானவர்.
மெய்யாகவே மதத்தை நேசிப்பவர்கள் எவரையும் தாக்கவோ இழிவுபடுத்தவோ மாட்டார்கள்.
சிலர் டொலர்களுக்காக இன மத முரண்பாடுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். 30 ஆண்டுகால போர் இடம்பெற்ற காலத்தில் இவர்களை காணக்கிடைக்கவில்லை.
அன்பு கருணையில் சிங்கள இனத்தை விடவும் சிறந்த இனமொன்று உலகில் வேறில்லை என பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் அவர்களே ஒரு சிறு திருத்தம்:
ReplyDelete'சில அரசியல்வாதிகள் நீங்கலாக' என்பதையும் உங்கள் கூற்றிலே சேர்த்துக் கொள்ளுங்கள்...!
singala makkaludan palahi palahi avanuhaling seyatpaduhalthan ungalukkullum vanthuviddathu evelavu ksau vangininga oru muslim pol pesunga
ReplyDeleteYou are out of your mind dude!
ReplyDelete