Header Ads



'சிறிய சம்பவங்கள்' 1983ம் ஆண்டு ஜுலை கலவரத்துக்கு ஒப்பிடப்பட்டு, உண்மைகள் புதைக்கப்படுகின்றன

நாட்டை ஸ்தம்பிக்க செய்வதற்கான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிகழ்வுகள் குறித்து உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மத்துகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

வடக்கில் காணப்பட்ட நிலைமைகளை யுத்தத்தின் மூலம் நிறைசெய்ய முடிந்தது. ஆனால் அதன் பின்னரும் அழுத்தங்கள் தொடர்கின்றன.

நாட்டில் இடம்பெறுகின்ற சிறிய சம்பவங்கள், 1983ம் ஆண்டு ஜுலை களவரத்துக்கு ஒப்பிடப்படுகிறது. இதன் மூலம் பல உண்மைகள் புதைக்கப்படுகின்றன.

இலங்கை தொடர்பில் போலியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

2 comments:

  1. உம்மை போன்ற மனித நேயம் அற்ற, துவேசம் பேசி பதவியை அனுபவிக்கும் கொடூரமான மனிதர்களால் தான் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் துயரமும் கஷ்டமும்.

    ReplyDelete
  2. பெளத்தத்தை காக்கிறோம் பெளத்தத்தை காக்கிறோம் என்று சொல்லி நீ என்ன செய்திருக்கின்றாய் நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லையே முஸ்லிம்கள் நாட்டுக்காக வெளினாடுகளின் உதவிகளை பெற்றுக்கொடுத்தார்கள். வெளினாட்டு நெருக்கடி வரும்போது முஸ்லிம்களால் மட்டும்தான் நாட்டுத்தலைவரையும் நாட்டையும் காப்பாற்ற முடிந்தது. உன்னைப்போல துவேசிகளால் உள் நாட்டில் குழப்படிகளை மட்டும்தான் உருவாக்க முடியும். பொறைமை நோய் பிடித்தவனே..

    ReplyDelete

Powered by Blogger.