Header Ads



ஜும்மா தொழுகையின் பின் கலகங்களில் ஈடுபட சதி - தெரிவிப்பது இலங்கை பொலிஸார்..!

20-06-2014 இடம்பெறவுள்ள ஜும்மா தொழுகையின் பின்னர் கலகங்களில் ஈடுபடும் நோக்கில் போலியான சில முஸ்லிம் அமைப்புகளினால் துண்டு பிரசுரங்களும், குறுந்தகவல்களும் மற்றும் பேஸ்புக் மூலம் செய்திகளும் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே இதனை கருத்தில் கொண்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த பொலிஸ் மா அதிபர் இளங்ககோன், அளுத்கம சம்பவம் தொடர்பில் பொதுபல சேனாவுக்கு எதிராக எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை எனவும் தெரிவித்தார்

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  ஊடகவியலாளர் சந்திப்பு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கொழும்பில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே பொலிஸ்மா அதிபர்  இலங்கக்கோன்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் இச்செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகனவும் கலந்துகொண்டார்.

வாராந்த அமைச்சரவை முடிகளை அறிவிக்கும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பாக அளுத்கம மற்றும் பேருவளை வன்முறைச் சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதோடு பல வாதங்களும் இடம்பெற்றன.

அளுத்கமவில் நடந்தது இதுதான்

பொசன் போயா தினமான கடந்த 12 ஆம் திகதியன்று சமிந்த தேரர் பத்திரகொட விகாரைக்கு தர்ஹா நகர் ஊடாக சென்றுகொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பிக்கு சென்ற வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இதன்போது பிக்கு சென்ற வாகனத்தின் சாரத்திக்கும் முச்சக்கர வண்டியில் வந்த முஸ்லிம் இளைஞர்களும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது தடுக்க முற்பட்ட தேரர் தாக்குதலுக்குள்ளானதாக தேரர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். பின்னர் குறித்த இளைஞர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

நான்கு கடைகள் மீது தாக்குதல்

குறித்த சம்பவத்தின் பின்னர் சமிந்த தேரர் அளுத்கம பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் இடம்பெற்று இரண்டு மணித்தியாலத்தில் முச்சக்கர வண்டியில் வந்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அளுத்தகம பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக அழைத்து வரவில்லை. இந்நிலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட பிரதேச மக்கள் அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கூடி சந்தேக நபர்களை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் இப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குறித்த மக்கள் கலைந்து சென்றனர். செல்லும் வழியில் குறித்த பிரதேச மக்கள் நான்கு கடைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அன்றைய தினமே  பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனுடன் அன்றைய சம்பவம் நிறைவுக்கு வந்ததுது. சம்பவத்தின் அடுத்த நாட்களான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.

தாக்குதலுக்குள்ளான தேரருக்கு வரவேற்பு விழா

தாக்குதலுக்குள்ளான சமிந்த தேரர் சிகிச்சைகள் முடிவடைந்து 15 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். இவரை வரவேற்க பிரதேச மக்களால் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு இப் பிரதேசத்தின் பிக்குகள் பொலிஸாரின் அனுமதி கோர பொசன் தினம் என்பதால் அனுமதி வழங்கியுள்ளதோடு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாமல் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

பிக்கு மீது மீண்டும் தாக்குதல்

விழா தினத்தன்று தர்கா நகர் பள்ளியில் முஸ்லிம் இளைஞர்கள் கூடியிருந்தனர். இவ்வாறு கூடவேண்டாம் என நாம் மதத் தலைவர்களுக்கு கட்டளையிட்டோம்.  எனினும் அதனை மீறி ஒன்று கூடினர். விழா முடிவடைந்து சமிந்த தேரர்  தர்ஹா நகர் ஊடாக விகாரைக்கு செல்லும் வழியில் தர்ஹா விகாரையில் ஒன்று கூடியிருந்த இளைஞர்கள் பிக்கு சென்ற வாகனம் மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளனர். இதனையடுதே வன்முறை வெடித்துள்ளது.

பாதுகாப்பு படையினர் வரவழைப்பு
இரு பிரிவினருக்கு வன்முறை வெடிக்க உடடியாக விசேட அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

நாம் இருந்த இடத்தில் சேதம் விளைவிக்கவில்லை
 தர்ஹா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இங்கு எந்த கடைகளுக்கும் சம்பவ தினத்தன்று சேதம் ஏற்படுத்தப்படவில்லை. நகருக்கு உள்ளே உள்ள கிராமங்களின் வீதிகளிவ் இருந்து கடைகளுக்கும் வீடுகளுக்குமே சேதம் ஏற்படுத்தப்பட்டது.

பிக்கு இறந்ததாக புரளி, முஸ்லிம்கள் இருவரும் தமிழரும் பலி

    இந்தக் கலவரத்தில் பிக்கு ஒருவர்   உயிரிழந்ததாக வதந்திகள்   வெளியிடப்பட்டன. ஆனால் அவ்வாறு  பிக்கு எவரும்   உயிரிழக்கவில்லை.    அளுத்கம பகுதியில் இரண்டு முஸ்லிம்களும்   வெலிப்பன்ன பகுதியில் ஒரு  தமிழரும் உயிரிழந்துள்ளனர். 

துப்பாக்கி பிரயோகங்கம் மேற்கொள்ளவில்லை
கேள்வி  மரணங்கள்  எவ்வாறு ஏற்பட்டுள்ளன? 
பதில்  அளுத்கமவில் ஏற்பட்ட இரண்டு  உயிரிழப்புக்களும்   வெட்டுக்காயங்களினாலும்  வெலிப்பன்னவில்  தாக்குதலினாலும் மரணம் ஏற்பட்டுள்ளன. துப்பாக்கி பிரயோகங்களினால் எவ்வித உயிரிழப்புகளும் இடம்பெறவில்லை

கேள்வி விசாரணைகள்?
பதில்  விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும்  கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் ஆகியோரால்  மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.  இதுவரை 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்  35 பேர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  விளக்க மறியலில்  வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள்  தொடர்ந்தும்  விசாரிக்கப்பட்டுவருகின்றனர். 

பொதுபலசேனாவில் யாரும் கைது செய்யப்படவில்லை

கேள்வி கைது செய்யப்பட்டவர்களில் பொதுபல சேனா  அமைப்பில் உள்ளவர்கள் யாராவது இருக்கின்றார்களா? 
பதில் அவ்வாறு பொதுபல சேனா உறுப்பினர்கள் யாரும் இல்லை.    முறைப்பாடு செய்யாமல்   சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. பொதுபலசேனாவுக்கு எதிராக ஏற்கனவே இரண்டு  தடவைகள்  கொழும்பில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள்  தொடர்பில் நடவடிக்ககைள் எடுக்கப்பட்டுள்ளன.
  
கேள்வி பொதுபல சேனா இந்த விழாவை நடத்த ஏன் அனுமதித்தீர்கள்? 
பதில்   உள்ளூர் பௌத்தர்களே இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.    இதனை பொதுபலசேனா  ஏற்பாடு செய்யவில்லை. 


கேள்வி கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை கூற முடியுமா? 
பதில் : 35 பேர் கைது செய்யப்பட்டனரட. இதில் 7 முஸ்லிம்கள். ஏனையோர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். 

கேள்வி பொதுபல சேனாவின் தலைவருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளனவா? 
பதில் இல்லை. அவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை. 

கேள்வி குறித்த விழா இடம்பெறுவதால் வன்முறைகள்  ஏற்படும் என  பொலிஸார் அறிந்திருக்கவில்லையா? 
பதில்   அவ்வாறு  இல்லை

கேள்வி  சேத விபரங்கள்  குறித்து?
பதில்  மூவர் உயிரிழந்துள்ளனர். 31 பேர் காயமடைந்துள்ளனர்.  சேதங்கள் குறித்து 138   முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 


பொது மக்கள் ஏமாற வேண்டாம் 
கேள்வி தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள்? 
பதில் கொழும்பில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர்  கலகங்களில் ஈடுபடும் நோக்கில் பதிவு செய்யப்படாத சில அமைப்புக்கள்   குறுந்தகவல்கள் மற்றும்  பேஸ்புக் மூலம்  பிரசாரம் செய்துவருகின்றன.  பொது மக்கள் அவற்றுக்கு ஏமாந்துவிடவேண்டாம். கொழும்பில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன 

அஜித் ரோஹன
செய்தியாளர் மாநாட்டில் அஜித் ரோஹன குறிப்பிடுகையில் 
கொழும்பில் வெள்ளிக்கிழமை   பள்ளித் தொழுகையின் பின்னர்   கலகங்கள் ஏற்படும் வகையில்   முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும்  அமைப்பு என்ற பதிவு செய்யப்படாத அமைப்பு   பேஸ்புக் மற்றும் குறுந்தகவல்கள் ஊடாக பிரசாரம் .செய்கின்றது.  அவ்வாறு எதற்கும் பொது மக்கள் ஏமாற்றமடையவேண்டாம் என்றார். 

3 comments:


  1. நாளை ஜும்ஆவில் முஸ்லிம்களைப் போன்று உடையணிந்த பொலிஸாரோ உளவு துறையினரோ பள்ளிவாசலுக்குள் வந்து தொழுபவா்கள் போல் நடித்து விட்டு ஏதாவதொரு அசம்பாவிதத்தை செய்துவிட்டு முஸ்லிம்களை பிரச்சினையில் சிக்கவைப்பதற்கான ஒரு சதியை வடிவமைக்கலாம்.

    இதன் மூலம் இந்த சம்பவத்திற்கு தொடா்பே இல்லாத கைது செய்யலாம். பொலிஸ் மா அதிபரே இந்த ஊடக சந்திப்பிற்கு வந்து ஆதாரமில்லாத இந்த கதையை கூறியிருப்பது பலத்த சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்துகின்றது.

    முஸ்லிம்களின் பக்கத்தில் இருந்து ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் பொதுபலசேனாவை குற்றங்களிலிருந்து கழுவி எடுப்பதற்கு மஹிந்த அரசுக்கு இலகுவாக இருக்கும்.

    எனவே முஸ்லிம்கள் நாளைய தினத்தை மிகவும் அவதானத்துடன் எதிா்கொள்ள வேண்டும். தொழுகை முடிந்ததும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாது அமைதியாக கலைந்து செல்ல வேண்டும்.

    இவா்களின் சதியை முறியடிக்க இதுவே சிறந்த வழி!
    - Azeez Nizardeen

    தகவல் - எம்.ரிஷான் ஷெரீப்

    ReplyDelete
  2. Who is the director of this film? We know like in movies the hero's hands are ultimately clean...If i scold either the president or any other parlimentarian "Paraya or Pakaya , will I not be arrested? Accusing that I have insulted them and causing them mental agony... Don't the ordinary citizens of a country have their own dignity??? Remember that we have more of it than those rascals as we are clean handed....

    ReplyDelete
  3. ஜனாதிபதி பௌதன், பாதுகாப்பு செயலாளர் பௌதன், போலீஸ் மா அதிபர் பௌதன், போலீஸ் பேச்சாளர் பௌதன். இறால் தன் தலையில் இருக்கும் அழுக்கை ஒப்புக்கொள்ளுமா?

    முஸ்லிம் உறுப்பினர்களே, அமைப்புகளே, தனி நபர்களே எங்களுக்குள் ஒருவரை ஒருவாய் குறை கூறி காலத்தை வீணடிக்காமல் எங்கள் பக்க ஆதாரங்களை திரட்டுவோம்.

    இறைவன் எல்லாம் அறிந்தவன். அவன் நீதியாளன் என்று மனதை தேற்றிக்கொள்வோம். இந்த கயவர் கூடத்துக்கு மேலும் வலு சேர்க்காமல் இருக்க இன்ரும் என்றும் வன்முறை, வீராப்பு இல்லாமல் ஆக்கபூர்வமான எதிர்ப்பை காட்டுவோம்.

    எதிர்ப்பு காட்டாமல் இருப்பவன் கோளை. வன்முறையிலும் வீரபிலும் எதுர்ப்பவன் மடையன். ஒரு முஸ்லிம் கோளையும் அல்ல மடையனும் அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.