இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக லண்டன் மில்ட்டன்கீன்ஸ் வாழ் புலம்பெயர் மக்கள் நோன்பு
(மீரா அலி ரஜாய்)
லண்டனிலுள்ள மில்ட்டன்கீன்ஸ் பிரதேசத்தில் வாழும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் தங்கள் தாய் நாட்டில் வாழும் இரத்த உறவுகளின் கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்ற நோக்கில் நேற்று வியாழக் கிழமை நோன்பு நோற்றனர்.
இந்த நோன்பு பிடிக்கும் ஏற்பாட்டினை SLMCFMK என்கின்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு SLMCFMK யின் தலைவர் தாஜுதீன் லெப்பே தலைமை தாங்கினார்.
இப்தரை தொடர்ந்து மௌலவி எம்.சபீக் அவர்களால் மேற்க் கொள்ளப்பட்ட துஆ பிரார்த்தனையில் ஆண்கள் , பெண்கள் , சிறுவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்கள் நாட்டில் சமயங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படவும் தங்கள் நாட்டில் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ எல்லாம் வால்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்றும் பிராத்தித்தனர்.



Post a Comment