ஐக்கிய இராஜ்யம் ஹெமெல் ஹெம்ஸ்டட் இலும் இலங்கை முஸ்லிம்களுக்காக துஆ பிரார்த்தனையும், விசேட கலந்துரையாடலும்
ஐக்கிய இராஜ்யம் ஹெமெல் ஹெம்ஸ்டட் (Hemel Hempstead) இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று (20/06/2014) வெள்ளிக் கிழமை ஜும்மாத் தொழுகையில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள நாசாகார வன்முறைகளில் இருந்து முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வேண்டி குனூத்தே நாசிலாஹ் ( தொழுகையில் விசேட பிரார்த்தனை) செய்ததுடன் தொழுகையின் பின்பு தர்கா நகர் மற்றும் பேருவளை பகுதியில் நடை பெற்ற இனக் கலவரத்த்கில் உயிரிழந்த ஷுஹதாக்களுக்கான மறைவான ஜனாஸாத் தொழுகை ஒன்றையும் நடாத்தியதுடன் இறுதியில் ஷுஹதாக்களுக்காகவும் நாட்டின் அமைதிக்காகவும் உருக்கமான துஆப் பிரார்த்தனையிலும் ஈடு பட்டனர்.
இந் நிகழ்ச்சிகளை லெஸ்டர் நகரிலிருந்து வருகை தந்திருந்த அஷ் ஷெய்க், அல் ஹாபிழ் ஷபீக் அவர்கள் முன் நின்று நடாத்தி வைத்தார்கள். இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஞாயிறு 22/06/2014 அன்றைக்கு இலங்கையின் தற்போதைய நிலவரங்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக அங்கு கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள அடக்குமுறைகளையும் தெழிவு படுத்தும் நிகழ்ச்சி ஒன்று எமது ஹெமெல் ஹெம்ஸ்டட் இலங்கை வாழ் முஸ்லிம்களால் நடாத்தப் பட இருப்பதுடன் குறித்த இலங்கைப் பிரச்சினைகளுக்கு எதிரான குரல்கள் ஐக்கிய இராஜ்ய பாராளுமன்றத்திலும் உள்ளூர் கவுன்சில்களிலும் பலமாக ஒலிக்கப் பட வேண்டும் என்பதற்காக குறித்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செய்யும் நோக்குடன் ஹெமெல் ஹெம்ஸ்டடை பிரதிநிதித் துவப் படுத்தி பாராளுமன்றத்திலும் உள்ளூர் கவுன்சிலிலும் அங்கத்துவம் வக்கிக்கும் மிக முக்கிய பிரமுகர்கள் விசேட அதிதிகளாக அழைக்கப் பட்டுள்ளனர்.
அத்தோடு ஹெரோ, வொட்போர்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் இந் நிகழ்ச்சியில் பங்கு பற்ற ஏராளமான இலங்கைச் சகோதரர்கள் வர இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
தகவல் : (01) A K M

Post a Comment