அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் மீது பௌத்த குண்டர்கள் தாக்குதல் - சிங்கள பெண்களின் கைகளில் வாள்கள்
அளுத்கம, மத்துகம, பேருவெல பகுதிகளில் சிங்கள பௌத்த குண்டர்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற அல்-ஜசீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் குழுவின் மீது குண்டர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில், அல்-ஜசீரா தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் சென்ற வாகனத்தின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன.
எனினும், அதில் பயணம் செய்த ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அதேவேளை, பௌத்த அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதலினால், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாடசாலைகள், பள்ளிவாசல்களில் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கான உதவிப் பொருட்கள் கொழும்பில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே நேற்று பிற்பகல் தர்கா நகரில் முஸ்லிம்களின் மூன்று கடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
அளுத்கம, பேருவெல பகுதிகளில், நேற்றுமாலை பதற்றமான சூழல் நிலவிய நிலையில், சிறிலங்கா இராணுவத்தினர் டாங்குகள், கவசவாகனங்களிலும் கால்நடையாகவும்ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பேருவெலவில் செய்தி சேகரிக்கச் சென்ற சண்டே லீடர், இருதின வாரஇதழ்களின் செய்தியாளர்கள் குழுவொன்றும், சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
அடையாளம் தெரியாத குழுவொன்று தம்மை அச்சுறுத்தி, தாக்கியதாக இந்த வார இதழ்களின் செய்தியாளர் குழு நேற்று கொழும்பு கறுவாத்தோட்டம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
வெலிப்பன்னவில் இருந்து தர்கா நகர் நோக்கிச் சென்ற போதே தாம் தாக்கப்ப்பட்டதாகவும் தாம் சென்ற வீதிகளில் மரங்கள் வெட்டப்பட்டு போடப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்களும் பெண்களும் அடங்கியிருந்த அந்தக் குழுவினர், பொல்லுகள், வாள்களுடன் நின்று தம்மிடம் கேள்வி எழுப்பியதாகவும், அவர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
தமது வாகனத்தின் சாரதியை தாக்கி தம்மை திருப்பி அனுப்பியதாகவும் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தக் குழுவில் பெரும்பாலும் சிங்கள ஊடகவியலாளர்களே அடங்கியிருந்தனர்.
தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிங்களவர்களே என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது பொலிஸில் முறைப்படு செய்து பலனில்லை. எல்லா விடயங்களையும் உலகறியச்செய்வதன் மூலம்தான் இக்கொடுங்கோலனின் ஆட்சியில் நடக்கும் பொட்டைத்தனமான விடயங்களுக்கு ஒரு தீர்வை எடுக்கமுடியும்.
ReplyDelete