Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவாருங்கள் - இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு

நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என முஸ்லிம் நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பிற்கான பொதுச் செயலாளர் அமீன் மதானி (Ameen Madani) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இலங்கையின் தென் பகுதியில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் நீண்ட காலமாக ஏனைய இன சமூகங்ளுடன் சுமூகமாக வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு முஸ்லிம் சமூகத்தினர் முக்கிய பங்களிப்பினை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மைய வன்முறைகள் இன சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மையை வலுப்பெறச் செய்யும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் வன்முறைகள் ஏற்படுவதனை தடுக்க சகல வழிகளிலும் முயற்சி எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் இலங்கை அதிகாரிகளிடம் கோரியுள்ளார். gtn

1 comment:

  1. முஸ்லிம்களின் உடமைகள் உயிர்களில் கைவைத்த இக்காடையர் கூட்டங்களும் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கமும் நன்றி கெட்ட மிருங்கள் என்பதை நிருபித்து விட்டார்கள். இனிமேலும் இவர்களுடன் கைகோர்த்து அரபு நாடுகளுக்கு சென்று பிச்சை வாங்கி கொடுக்க யாராவது முன்வருவார்களா? முஸ்லிம்களிடமே உதவிகேட்டு, முஸ்லிம்களுக்கே அனியாங்கள் செய்து, அவைகளை பத்திரிகைகளில் வெளியிடவேண்டாம் என்று சொல்லும் வெக்கம் கெட்ட தலைவனை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
    இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள கதி இவர்கள் மனதில் நச்சுக்கருத்துக்களாய் இருந்தவையே செயலாக கொடுரமாக கொலைசெய்யும் அளவிற்கு மாறியுள்ளன.

    முஸ்லிம்களே ஒருபோதும் இவர்களை நம்பவேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.