Header Ads



முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பதிலை ஏற்கின்றார்களா...?

(நஜீப் பின் கபூர்)

பொது பல சேனா அமைப்பின் தோற்றுவிப்பாளரும் அதன் தற்போதய தலைவருமான கிரம விமலஜோதி தேரர் இன்று உள்ளூர் தொலைக் காட்சி அலைவரிசையொன்றின் முன் தோன்றி பொது பல சேனா அமைப்பிலிருந்து தான் விரைவில் வெளியேறப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்த அமைப்பை 2012 ல் தோற்றுவித்தவரே இந்த கிரம விமலஜோதி தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தான் தோற்றுவித்த இந்த அமைப்பு அதன் நோக்கங்களில் இருந்து விலகிச் செல்வதுடன் ஞானசாரத் தேரரின் வார்த்தைகள் பேசுகின்ற முறை நடந்து கொள்கின்ற ஒழுங்கு என்பன தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது என்றும் அவர் அந்த தொலைக் காட்சிமுன் சொல்லி இருக்கின்றார். நடக்கக் கூடாத விடயங்கள் எல்லலாம்  தற்போது நடந்து விட்டது குதிரை கூடாரத்துக்குள் இருந்து வெளியே போய்விட்டது.

உடனடியாக இந்த நேரத்தில் தலைமைப் பதவியிலிருந்து வெளியேறுவது பொருத்தமில்லாத  விடயமாக இருந்தாலும் இன்னும் இரண்டொரு மாதங்களில் தான் தோற்வித்த இந்த அமைப்பிலிருந்தும் அதன் தலைமைப் பதவியில் இருந்தும் தான் வெளியேருவது உறுதி என்று அவர் குறிப்பிட்டார். கிரம விமலஜோதி தேரர் பதவி துறப்பு அறிவிப்பால் பொது பல சேனா பிளவுபடுகின்றது.

பொயிலே பிழைப்பு நடத்துகின்ற இந்த அமைப்பு இன்று, அலுத்கம சம்பவத்தில் கொல்லப்பட்ட பேரினத்தவர்களுக்கான அஞ்சலி சொலுத்துகின்ற கூட்டம் மாவனெல்லையில் என்ற பெயரில் ஒரு கூட்டதை நடத்த  நடவடிக்கைகை மேற் கொண்டிருக்கின்றது என்று ரணில் விக்கிரம சிங்ஹ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த போது. இல்லை நாம் அந்தக் கூட்டத்தை நடத்த முடியாதவாறு  நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுத் தடை விதித்திருக்கின்றோம் என்று அதற்குப் பதில் அளித்தார் பிரதமர் தி.மு. ஜயரத்ன.

எந்தவெரு சிங்களவரும் கொல்லப்படாத போதும் அப்படி நிகழ்ந்தாக துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து மக்கள் மத்தியில் விநியோகிக்கின்றார்கள், கூட்டம் போடுகின்றார்கள் என்றால்  அந்தக் கூட்டம் எதற்காக என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. மேலும் அலுத்கமையில் ஒரு பௌத்த தேரர் கொல்லப்பட்டுவிட்டார் என்று கதை பரவியதால் ஆத்தரமடைந்த மக்கள் அவ்வாறு உணர்ச்சிவசத்தில் அங்கு அட்டகாநம் பண்ணி விட்டார்கள் என்று கதை கூறி கொலைகளையும் அழிவுகளையும் செய்தவர்கள் இதே ஞானசேரர் ஆட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொலிசார் தனது கடமைகளைச் சரியாகச் செய்யாத காரணத்தால்தான் அங்கு வன்முறை நடந்தது என்று ஞானத்தார் வேறு குற்றம் சாட்டி இருக்கின்றார். இத்தனை காரியங்களையும் பார்த்த ஞானம் இன்றும் சுதந்திரமாக இருக்கின்றது என்றால் அதற்கு என்ன காரணம்.? அவருக்கு என்ன அதிகாரம் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பது புரிந்து கொள்ளக்கூடியதுதான். எனவே மனிதரை எவரும் நெருக்கமுடியாது...? 

பிரதமர் தி.மு. இன்று பாராளுமன்றத்தில்  கொடுத்த பதில் சரியானதா?
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பதிலை ஏற்கின்றார்களா?

அலுத்கமயில் கூட்டம் நடத்தவும் தர்கா நகர் ஊடாக ஊர்வலம் போவதற்கும் முஸ்லிம் உலமாக்களின் சம்மதம் பெறப்பட்ட பின்னே இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்படி அனுமதி வழங்கி தர்கா நகர் ஊடாக ஊர்வலம்போன போது கல் எறிந்து தாக்கியதால் தான் வன்முறை வெடித்தது என்று இன்று(17.06.2014) பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ரணிலின் விக்கிரமசிங்ஹவின் கேள்விக்குப் பதில் கொடுக்கின்றபோது குறிப்பட்டார் பிரதமர் தி.மு.  இதன் உண்மைத் தன்மைகளை பிரதேச மக்களும் பாராளுமன்றத்திலுள்ள  முஸ்லிம் உறுப்பினர்களும் சமூகத்திற்குத் தெளிவு படுத்த வேண்டும்.

2 comments:

  1. முஸ்லிம் M.P கள் தி.மு. ஐயாவின் காலைக்கழுவி தண்ணியை குடிக்கணும் அப்போவாவது புத்தி வருகுதா என்று பார்ப்போம்..!

    ReplyDelete
  2. தி.மு அய்யாவின் காலை கலுவி தன்னி குடித்தால் போதாது.தி.மு அய்யாவின் சுன்னியை கலுவி தன்னியை குடிக்க வேண்டும் அப்பதான் புத்திவரும்

    ReplyDelete

Powered by Blogger.