பதுளையில் பொலிஸார் உசார் நிலையில்..!
(மொஹமட் பாயிஸ்)
பதுளை முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம், 17-06-2014 முஸ்லிம் மாணவர்களின் வரவும் குறைந்தே காணப்பட்டது.
பதுளையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையால் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஸ்தம்பித்தன.
மாணவர்களின் வரவும் கணிசமான அளவு குறைந்தே காணப்பட்டது. பதுளை நகரில் கலகம் தடுக்கும் பொலிஸார், குண்டன் தடிகளுடன் ஆங்காங்கே கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். விNஷட பொலிஸ் ரோந்து சேவைகளும் இடம்பெற்று வருகின்றன.
அனேகமான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டபோதும் சன நடமாட்டம் நகரில் குறைந்தே காணப்பட்டது.
பதுளை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
18 ம் திகதி யுவதிகளை வீடியோ எடுத்ததாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் முஸ்லிம் இளைஞரும், அவரை தாக்கியதாக கருதப்படும் நபர்களும் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளனர். இதன்போது மீண்டும் பதற்ற நிலை ஏற்படலாம் என பரவலாக பேசப்படுகிறது.
இருப்பினும் பொலிஸார் உசார் படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment