'முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்லி, நேரத்தை வீணடிப்பதில் பயனில்லை'
மனோ கனேசனின் பேஸ்புக்கிலிருந்து..!
இந்த நொடியில் என் மனதில் (19/06/14)
ஞானசார தேரரை கைது செய்யென அனைத்து முஸ்லிம் பங்காளி கட்சிகளும் ஒருசேர கோருவார்களா ?
பதவிகளில் இருந்துகொண்டே, அந்த பதவி தரும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, தமது மக்களின் பிரச்சினைகளை உலகத்துக்கும், அரசாங்கத்துக்கும் காத்திரமாக எடுத்து சொல்ல முடியும் என முஸ்லிம் அமைச்சர்கள் நினைக்கலாம். இப்படியான நிலைப்பாடுகளை எடுப்பதற்கு அவர்களுக்கு முழுமையான உரிமை இருகின்றது.
அதனால்தான், முஸ்லிம் அமைச்சர்கள் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டும் என்றும், ஆனால் அந்த வைத்தியம் என்ன என்பது பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் கடந்த வாரம் நான் சொன்னேன்.
ஆகவே ரவுப் ஹக்கீம் முதற்கொண்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்லி, அதுபற்றி விவாதித்து நேரத்தை வீணடிப்பதில் பயனில்லை.
உண்மையில் இதுவல்ல, பிரச்சனை. உண்மையான பிரச்சனை பொதுபல சேனையும், அதன் பொது செயலர் கலபொட ஞானசார தேரும், அவர் அனுபவிக்கும் Impunity என்ற “குற்றம் செய்வதற்கான வரையற்ற சுதந்திரமும்” ஆகும். ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும் என அரசாங்கத்தின் அனைத்து முஸ்லிம் பங்காளி கட்சிகளும் ஒருசேர கோருவார்களா?
.jpg)
ஜானசெக தேரர வைத்து நாங்கள் அரசியல் லாபம் அடையலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கும் வேலையில் இப்படி திடீர் என்று அவர கைது செய்தால். என்ன கணேஷ் புரியாத மாதரி சின்ன பிள்ள போல பேசிற, நாலு பேரு செத்தால் தான் எண்களின் கதிரை கிடைக்கும் என்றால் 40 பேரையும் காவு கொடுக்க நாங்க தயார்
ReplyDeleteஉண்மை இதுதான் இன்றைய தேவை அரசாங்கத்துடன் இருக்கும் பங்காளிக்கட்சிகள் முஸ்லிம் தலைவர்கள். அரசுடன் இருந்துகொண்டே செயல்படுவது தேவையானதே. அதேவேளை முஸ்லிம்களுக்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட ஞானசாரனை கைது செய்ய ஒன்று அரசாங்கம் முன்வந்து நாடகமாடாமல் செயல்பட வேண்டிய கட்டாய சூழ் நிலையை உருவாக்கவேண்டும். இல்லையேல் இப்பிரச்சினையை சர்வதேச ரீதியில் எடுத்துசெல்ல வேண்டும். இவைகள் இரண்டையும் தவிர வேறு வழியில்லை. விட்டு வைத்தால் இனி ஆரம்பிக்கும் பிரச்சினை மிகவும் பாரதூரமான அழிவுகளில் போய் முடியும். நாம் தற்போது சரியாக சிந்தித்து முஸ்லிம்களுக்காக உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய கடைசி எல்லை விழும்பில் நின்று கொண்டிருக்கின்றோம். நம் தலைவர்கள் இன்னும் இப்படியே அரசாங்கத்தை நம்பி இருப்பார்களானால். ஒன்றும் ஆகப்போவதில்லை. காடையர்கள் கூட்டம் நாளையும் இதே பிரச்சினையை ஆரம்பித்து சிறுபான்மையினரை அழிக்கும் நோக்குடன் வெளிப்படையாகவே செயல்படுகின்றார்கள் செயல்படுவார்கள் என்பது நிச்சயம், அதை நடக்க விடாமல் தடுப்பதுதான் இன்றைய காலத்தின் அவசியம்.
ReplyDelete