மனநல நோயாளி ஞானசாரரை உடனடியாக கைது செய்யுங்கள் - பாராளுமன்றத்தில் கோரிக்கை
பௌத்த தர்மத்துக்கு இழுக்கினை ஏற்படுத்தி வரும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மனநல நோயாளியாவார். எனவே அவரை உடனடியாக கைது செய்து மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட எம்.பி.யான பாலித்த தெவரப்பெரும நேற்று பாராளுமன்றத்தில் கோரி நின்றார்.
இது கண்ணை மூடியவாறும் இதயப்பகுதியிலும் கட்டு மருந்துடனான பெண்டேஜ் செய்யப்பட்டவாறு சபைக்கு சமூகமளித்த பாலித்த தெவரப்பெரும எம்.பி. சபையில் தனது சேர்ட்டையும் பெனியனையும் கழற்றி தாம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள விதத்தையும் அதனால் இடப்பட்டுள்ள கட்டு மருந்து பென்டேஜையும் பிரதி சபாநாயகரிடம் காண்பித்தார்.
இதேவேளை தன் மீது தாக்குதல் நடத்திய பொது பல சேனா குழுவினர் தான் சமயோசிதமாக செயற்பட்டிருக்கா விட்டால் தனது வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட 16 முஸ்லிம்களையும் படுகொலை செய்திருப்பர் என்று பாராளுமன்றத்தின் கவனத்தினை ஈர்த்தார்.
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளின் பின்னர் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தே பாலித்த தெவரப்பெரும எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதி சபாநாயகரின் அனுமதியுடன் பாலித்த தெவரப்பெரும எம்.பி மேலும் கூறுகையில்,
அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அங்கு நிலைமைகளை ஆராய்வதற்காக சென்றிருந்தேன். அப்போது பாடசாலைச் சிறுவர்கள் விடுதியொன்றில் சிக்கியிருப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. அந்த சிறுவர்களை மீட்டுத் தருமாறு பொலிஸாரிடம் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தாத காரணத்தினாலேயே குறித்த பெற்றோர் மேற்படி சிறுவர்களை மீட்டுத்தருமாறு என்னிடம் கூறினார்கள்.
சிறுவர்கள் சிக்குண்டிருந்த விடுதிக்கு செல்லும் வழியில் 500 க்கும் மேற்பட்ட பொலிஸாரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
பொலிஸாரும் அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்த அதே பகுதியில் பொது பலசேனா என்ற அமைப்பினர் பெருந்தொகையானோர் பொல்லுகள் தடிகள் ரீப்பைகள் உள்ளிட்ட பொருட்களுடன் நின்றிருந்தனர்.
நான் பாராளுமன்ற உறுப்பினர் என்பது அங்கு நின்றிருந்த பொலிஸாருக்கு நன்றாகவே தெரியும். இந்நிலையில் குறித்த இடத்துக்கு சென்று மூன்று சிறுவர்களையும் மீட்க எனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டதுடன் கலவரத்தில் சிக்கியிருந்த முஸ்லிம்களையும் அதாவது இரு கர்ப்பிணித் தாய்மார்கள் மூன்று குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட 16 பேரை எனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வரும்போது ஆயுதங்கள் பொல்லுகளுடன் பாதையில் நின்றிருந்த பொது பல சேனாவினர் எனது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.
இதனால் எனது வாகனம் முற்றாக சேதமடைந்தது. கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு மத்தியிலும் நான் எனது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்திக் கொண்டிருந்தேன்.
கற்களாலும் பொல்லுகளாலும் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்ந்து கொண்டிருந்ததால் கர்ப்பிணித்தாய் ஒருவரின் தலையின் பின் புறத்தில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் சுயநினைவற்று வாகனத்துக்குள் வீழ்ந்தார். அப்போது அவர் இறந்து விட்டதாகவே கூறப்பட்டது. ஆனால் அவர் மூச்சிரைத்திருந்தார்.
இதேவேளை கல்வீச்சு ஒன்று வாகனத்துக்கு இருந்த ஒன்பது மாதக் குழந்தையின் தலையில் பட்டதை படுகாயங்களுக்குள்ளான குழந்தை தற்போதும் கொழும்பில் அவசர சிகிச்சை பெற்று வருகிறார்.
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் செயற்பாடுகள் பௌத்த தர்மத்துக்கு இழுக்கினை ஏற்படுத்துவனவாக உள்ளன.
அது மாத்திரமின்றி அவர் ஒரு மன நோயாளி போன்று செயற்படுகின்றார். மன நோயாளியான அவரை உடனடியாக கைது செய்து மனநல மருத்துவனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

வாக்குக்காக பல மாதரிஉம் பேசும் முஸ்லிம் அரசியல் வாதிகளை விட தனது உயர கூட துச்சமகா நினைத்து உதவி செய்த இந்த சிங்கள சகதொரனின் பின்னால் அணிதிரண்டாலும் நமக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த முஸ்லிம் மக்கள் சிந்திப்பார்களா
ReplyDeleteஇன மொழி பார்க்காமல் மனித நேயதிர்கா துணிந்து நின்ற இந்த சிங்கள சகோதரன் உளமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteபெருவளில் முதல கண்ணீர் வடித்து விட்டு, பின்னர் அரசுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்ன ஹகீமை விட இந்த சிங்கள சகோதரன் எவ்வளோவோ சிறப்பு மிக்கவர் என்பதை இனி யாவது உணருங்கள்
இது எல்லாம் அரசின் திருவிளையாடல் என்று தெரிந்தும் எல்லா முஸ்லிம்களையும் ஏமாற்றி பேசுவதில் ஹகீம் ரும்ப கில்லாடி
Allah iwarukku suhaththa koduththu hidayayhthayum koduppaanaaka aameen
ReplyDeleteஅவர் மன நோயாளியல்ல. அவர் ஏற்றுக் கொண்டவாறு அவர் ஓர் இனவாதி.
ReplyDeleteThe great man
ReplyDeleteWe have to wish to say thanks. Bt that thanks not inough to you humanity/ wonderfull job.
So however we can not forget you an easily.
So onece again thanking for your great job