Header Ads



வெளிநாடுகளில் உள்ள, இலங்கை முஸ்லிம்கள் தாரளமாக உதவலாம்..!

பௌத்த இனவெறியர்களில் தாக்குதலுக்கு முகம்கொடுத்து அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை முஸ்லிம்களுக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம் உறவுகள் மிகத் தாராளமாக உதவலாமென முஸ்லிம் கவுன்சில் அறிவித்துள்ளது.

இதனை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியப்படுத்திய முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன், பாதிக்கப்பட்டவர்களை இந்த உதவிகள் சென்றடைய வழிவகுக்கப்படுமென கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள தனிநபர்கள், அமைப்புககள் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு உதவ முன்வர வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

என்.எம்.அமீன் (தொலைபேசி) 0772612288

மேலும் இலங்கையிலிருந்து பாதிக்கப்ட்ட முஸ்லிம்களுக்கு உதவுபவர்கள், தெஹிவளை பள்ளிவாசலில் அதனை ஒப்படைக்க முடியுமெனவும், அந்தப் பொருட்களை தாம் பாதுகாப்புத் தரப்பு உதவியுடன் களுத்துறை மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய குறிப்பு - உதவ விரும்புபவர்கள் மாத்திரம் அல்லது பாதிப்புகளை எதிர்நோக்குபவர்கள் மாத்திரம்  அமீனுடன் தொடர்புகொள்ள முடியும். களுத்துறையில் நடைபெற்ற சம்பவங்களை அறியும் நோக்குடன் வெளிநாட்டிலுள்ள இலங்கை முஸ்லிம்கள் அமீனுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டாமெனவும் இங்கு பக்குவமாக வேண்டிக்கொள்கிறோம்..!

3 comments:

  1. Please addage bank account ditails

    ReplyDelete
  2. Keep publishing this message will not make sense. please provide bank account details urgently. we SLK expatriate waiting to extend our contribution.

    ReplyDelete

Powered by Blogger.