Header Ads



நான் ஒரு முஸ்லிம், கசினோ தொடர்பில் எனக்கு ஒன்றும் தெரியாது - பைஸர் முஸ்தபா

நான் ஒரு முஸ்லிம் என்ற வகையில் கசினோவை ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன். இருப்பினும் அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட செயல் நுணுக்க கட்டளை சட்ட மூலத்தில் கசினோ உட்பட எந்தவொரு சூதாட்டத்திற்கும் இடமில்லையென முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். 

இதேவேளை இத்திட்டத்தினூடாக நவீன நட்சத்திர ஹோட்டல்களே நிர்மாணிக்கப்படவுள்ளது. இதனூடாக முதலீடு அதிகரிக்கும். இதுவரையில் 258 முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் இவ்வருடத்தில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலாபமீட்டுவதே எமது இலக்காகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பாக கொழும்பிலுள்ள உலக வர்த்தக வலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில்  செயல் நுணுக்க கட்டளை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த சட்டமூலத்தில் கசினோவிற்கோ அல்லது எவ்வித சூதாட்டங்களுக்கோ இடம் வழங்கப்படவில்லை. இச்சட்ட மூலத்தினுடாக நாட்டில் நவீன நட்சத்திர ஹோட்டல்களை நிர்மாணிப்பதே நோக்கமாக உள்ளது. 

இந்நிலையில் இந்நாட்டிற்கு முதலாவது கசினோ உள்ளிட்ட சூதாட்ட சட்ட மூலத்தினை ஐக்கிய தேசிய கட்சியே 1988 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இன்று வரை நாட்டில் கசினோ விபசாரம் சூதாட்டங்கள் காணப்பட்டு வருகிறது. இதற்கு வழி சமைத்தது ஐ.தே. கட்சியாகும். 

நான் ஒரு முஸ்லிம் என்ற வகையில் கசினோவை ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன். கசினோ தொடர்பில் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டதும் கிடையாது. அதே வேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் கசினோவிற்கு இடமளிக்கமாட்டார். எதிர்க்கட்சிகளே அரசிற்கு அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.  

2 comments:

  1. dear brother
    this minister a baby he dont know any think he drinking lactogen milk children milk

    ReplyDelete
  2. Hooooooo.you are a baby.

    ReplyDelete

Powered by Blogger.