Header Ads



பாடசாலைகள் 'U' சித்திகளை விற்குமிடமா..? உற்பத்தி செய்யும் இடமா..??

(நவாஸ் சௌபி)

கல்வி அடைவுகளை மதிப்பிடுவதில் பரீட்சை முடிவுகள் தருகின்ற பெறுபேறுகள் தனிப்;பட்ட மாணவர்களின் நிலையினை மாத்திரமன்றி அவரது பெற்றோர், குடும்பாம், ஆசிரியர்கள் என்று பல்வேறு தரப்பினர்களையும் உள்ளடக்குவதோடு, அது பாடசாலைகள் மற்றும் கல்வி அலுவலகங்களின் நிலையினையும் எடுத்துக்காட்டுகின்ற ஒரு குறிகாட்டியாகவும் அமைந்துவிடுகிறது.

இதனடிப்படையில் புசுயுனுநு குஐஏநு ளுஊர்ழுடுயுசுளுர்ஐPஇ ழுஃடுஇ  யுஃடு ஆகிய பரீட்சைகள் மாணவர்களின் கல்வித் தகைமையை வெளிப்படுத்துவதற்கான அரச பரீட்சைகளாக நடத்தப்படுகின்றன. இப்பரீட்சை முடிவுகள் பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கமும் அதன் அடைவும் ஒவ்வொரு பாடசாலைகளினதும் கல்வித் தரத்தினை மதிப்பிடுவதற்கான ஒரு குறிகாட்டியாக மதிப்பிடப்படுகிறது. இதில் ஒரு பாடசாலையின் வினைதிறன், விளைதிறன் என்பனவும் அளவிடப்படுகிறது.

ஒரு பாடசாலையின் வகுப்பறையில் 40 மாணவர்கள் காணப்பட்டால் அவர்கள் அனைவரினாலும் குறிப்பிட்ட பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் யு சித்தியைப் பெறமுடியாது அதனை அடையச் செய்வதுதான் ஒரு பாடசாலையின் கடப்பாடும் அல்ல. மாறாக குறிப்பிட்ட பரீட்சைக்குத் தோற்றுகின்ற அனைத்து மாணவர்களையும் அப்பரீட்சையில் சித்தியடையச் செய்து அடுத்த உயர்வுக்கு அவர்களை கடத்திவிடுவதுதான் ஒரு பாடசாலை கொண்டுள்ள பொறுப்பாகும்.

குறிப்பாக ழுஃடுஇ யுஃடு  பரீட்சையில் இதன் பொறுப்பினை ஒவ்வொரு பாடசாலைகளும் சிறப்பாக வெளிப்படுத்த முயற்சிப்பதில்தான் அப்பாடசாலையின் கல்வி அடைவினது வெற்றி தங்கி இருக்கிறது. இந்த வெற்றி என்பது ஒரு பிள்ளை ழுஃடுயில் எடுக்கும் 9யுயிலும் இன்னுமொரு பிள்ளை யுஃடுயில் எடுக்கும் 3யுயிலும் மாத்திரம் தங்கி இருப்பதில்லை.

இதற்கமைய அண்மைக்காலமாக பெரும்பான்மையான பாடசாலைகள் ழுஃடுஇ யுஃடு மற்றும் புலமைப் பரீசில் பரீட்சை முடிவுகளை வைத்து நடாத்துகின்ற பாராட்டு விழாக்களின் வெளிப்பாடானது இதுதொடர்பான பல விடயங்களையும் கருத்தில் கொள்ள வைத்திருக்கிறது. எனவே இதன் பின்னணிகளையும் பின்விளைவுகளையும் ஆராய்வது மிகவும் அவசியமாகின்றது.

பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெறுகின்ற மாணவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதும் அதன் மூலம் ஏனைய மாணவர்கள் சிறந்த சித்திகளைப் பெறுவதற்குத் தூண்டப்படுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றே. அவ்வாறான ஒன்று அவசியமற்றது என்றுரைப்பது எனது எழுத்தின் நோக்கமல்ல. மாறாக அவ்வாறான பாராட்டுகளுக்கும் விழாக்களுக்கும் சில பாடசாலைகள் கொடுக்கின்ற முக்கியத்துவம் அதே பரீட்சையில் பின்னடைந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் அடைவுகளை முன்னேற்றுவதற்கும்  கொடுக்கப்படுகிறதா? என்பதை அவதானப்படுத்துவது எனது எழுத்தின் நோக்கமாகும்.   

ஒரு பிள்ளையினால் எடுக்கப்பட்ட 9யு யினை மட்டும் பெரிதாக விழா எடுத்துப் பாராட்டிவிடுகின்ற அதேவேளை, அப் பரீட்சையில் சித்தியடையாத 100 பிள்ளைகளின் நிலையினை நாங்கள் கவனிக்காது விட்டுவிடுகின்றோம். 

10 பிள்ளைகள் பல்கலைக்கழகம் சென்றதை பாராட்டிக் கொண்டாடுகின்றோமே தவிர அவர்களோடு படித்த 200 பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து எங்களிடம் எந்த தீர்வுமில்லாது இருக்கின்றோம். 

இவற்றைப் பொறுப்பேற்பது யார்? இதற்கு பதில் கூறுவதும் யார்? 

இவ்வருடம் நடைபெற்ற ழுஃடு பரீட்சையில் 5737 மாணவர்கள் 9யு சித்தியைப் பெற்ற போதும் 9444 மாணவர்கள் 9று சித்தியைப் பெற்றிருக்கிறார்கள். எனவே 9று எடுத்த மாணவர்களுக்கும் எமது பாடசாலைகள்தானே பொறுப்புக் கூற வேண்டும்.   

அதுமாத்திரமன்றி சில பாடசாலைகள் பரீட்சைக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது பின்தங்கிய மாணவர்களை வெளிவாரியாக விண்ணப்பிக்கும்படி வேண்டிவிட்டு, திறமையான மாணவர்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து பரீட்சைகளுக்கு தோற்றச் செய்கிறார்கள். 

இதன்படி பாராட்டைப்பெறுகின்ற அதிகமான பாடசாiலைகளின் பரீட்சை முடிவுகளுக்குப் பின்னாலும் பரீட்சையிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட மற்றும் பரீட்சையிலில் தோற்றுப்போன பலநூறு மாணவர்களின் பரீட்சை முடிவுகளும் புதைக்கப்பட்டும் மறைக்கப்பட்டுமிருக்கிறது. அதைத் தோண்டி எடுத்துப் பார்ப்பதன் மூலம்தான் பாடசாலைகளின் உண்மையான மதிப்பீடுகளை எம்மால் மதிப்பிட முடியும்.

இந்நிலையில் பரீட்சை முடிவுகள் வெளியானவுடன் சில பாடசாலைகளில் பாராட்டு விழாக்களும், கட்டவுட் பேனர்களும், உயர்ந்து நிற்கின்றன. பிள்ளைகள் பெற்ற யு சித்திகளை பாடசாலைகள் விற்பனை செய்வதுபோன்று விளம்பரம் செய்யப்படுகின்றது. அவ்வாறு பாராட்டுக்களைச் செய்வதுபோன்று யு சித்திகளைப் பெறாத பாடங்களின் பின்னடைவுளை கண்டறிந்து அவற்றுக்கான யு சித்திகளை எப்படி உற்பத்தி செய்ய முடியும் என்பது பற்றிய முன்னேற்ற அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் பாடசாலைகள் முன்னெடுக்க வேண்டும்.

மறுபுறத்தில் இத்தகைய யு சித்திகளை பாடசாலைகள் முழுமையாகப் பொறுப்பேற்க முடியுமா? என்ற கேள்விகளுக்கும் இடமளிப்பதாக இன்று தனியார் வகுப்புக்கள் (வுரவைழைn) மாணவர்களின் கல்வியில் இரண்டரக் கலந்திருக்கின்றன. கசப்பாக இருந்தாலும் சில உண்மைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒவ்வொரு யு சித்திக்குப் பின்னாலும் ஒரு பிள்ளைக்கு ஏற்பட்டிருக்கும் செலவு அதிகமானது. அதிக விலை கொடுத்தே அதிகமான பிள்ளைகள் யு சித்தியைப் பெறுகின்றார்கள்.  

எந்தவிதமான வெளிவாரி வகுப்புகளுக்கும் செல்லாது பாடசாலைகளில் மாத்திரம் கற்று யு சித்தியைப் பெறுகின்ற மாணவர்கள் மிகவும் அரிது. அவ்வாறு சித்தியடைந்த மாணவர்களுக்காக ஒரு பாடசாலை மார்தட்டுவது பெருமைக்குரிய விடயம் ஆகும். ஆனால் இன்று அதிகமான பிரபல்யமான பாடசாலைகள் பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் தனியார் வகுப்புக்களில் கற்பிக்கின்ற ஆசிரியர்களை வரவழைத்து பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்து பணம் அறவிட்டு நடைமுறைப்படுத்துவதனை எம்மால் அவதானிக்க முடிகிறது. அவ்வாறாயின் குறிப்பிட்ட பாடசாலையில் காணப்படுகின்ற ஆசிரியர் வளம் என்பது எத்தகைய மதிப்பீட்டைப் பெற்றிருக்கிறது என்ற கேள்வியும் இதில் மறைமுகமாக எழுகிறது அல்லவா?

அடுத்து அதிகமான தனியார் கல்வி நிறுவனங்கள் பரீட்சை முடிவுகள் வெளியானதும் எமது கல்வி நிலையத்தில் கற்று சிறந்த சித்திகளைப் பெற்றோர் என்ற விபரத்தினை புகைப்படங்களுடன் துண்டுபிரசுரங்களாகவும் விளம்பரங்களாகவும் வெளியீடு செய்து தனியர் கல்வி முறையை கவர்ச்சிகரமானதாக ஊக்குவிக்கின்ற நடைமுறையினையும் எம்மால் காணமுடிகிறது.

எனவே இத்தகைய நிலைமைகளில் மாணவர்களின் பரீட்சை முடிவில் பெருமையடைவோர் யார்? பாடசாலைகளா? தனியர் கல்வி நிறுவனங்களா? என்பதற்கு விடைகாண பட்டிமன்ற விவாதங்கள் எமக்குத் தேவைப்படுகின்றது. 

மேலும் பல பாடசாலைகள் தங்களது மின்சாரக் கட்டணத்தைக் கூட செலுத்துவதற்கு வதசியில்லாது அவதிப்படும் நிலையில் இவ்வாறான பாராட்டு விழாக்களுக்கு அதிக பணத்தினை நண்கொடைகாளப் பெற்றேனும் செலவு செய்கின்றன. இவ்வாறு நடைபெறுகின்ற பாராட்டு விழாக்கள் ஏனைய மாணவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் இல்லாமல அவர்களுக்கு விரக்த்தி ஊட்டும் வகையிலும் அதிபர் ஆசிரியர்களுக்கு அதீத புகழாரம் சூட்டுவதாகவும்  நடைபெறுவதாக இவ்வாறான விழாக்களை விமர்சிப்போர் கூறுகின்றனர். 

அடுத்தபடியாக இவ்வாறான விழாக்களில் கலந்துகொள்வதன் மூலம் அரசியல்வாதிகள் தங்களுக்கான சமூக அக்கறைகளை வெளிப்படுத்தும் ஒரு பிரச்சாரப் போட்டியும் தற்;போது இடம்பெறுவதாக அவதானிக்கப்படுகிறது. ஒரு பாடசாலையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டும் விழாவில் ஒரு அரசியல்வாதி கலந்துகொண்டால் இன்னுமொரு பாடசாலையில் மற்றுமொரு அரசியல்வாதி தான் கலந்துகொள்ளும்  பாராட்டுவிழாவை ஏற்பாடு செய்யுமளவிற்கு இவ்விழாக்கள் அரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவமுடையதாக மாறியிருக்கின்றது. இந்நிலை தொடருமாயின் குறிப்பிட்ட விழாக்கள் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டுவதற்கான விழாவாக இல்லாமல் அரசியல்வாதிகள் பெயர் எடுப்பதற்கான விழாவாகவும் மாற்றம் பெற்றுவிடலாம்.  

மேற்படி விடயங்களை ஆழமாக சிந்திக்க வேண்டிய கடப்பாடுகளுடன் இவ்வாறான பாராட்டுவிழாக்களை பாடசாலைகள் நடத்துகின்ற போது, அது பூரணத்துவமான ஒரு விழாவை நாம் கொண்டாடுவதாக எம்மை மனநிறைவு கொள்ளச் செய்யும். மாறாக ஒரு பிள்ளை முழுச் சித்தி பெற்ற அதே நேரம் 100 பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடையாது இருக்கின்ற குற்ற உணர்வு எமது கல்வி முன்னேற்றத்தை கேள்விக்குட்படுத்திக்கொண்டே இருக்கும். 

No comments

Powered by Blogger.