நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், மஹிந்த ராஜபக்ஷ
நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.
அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.

Post a Comment