ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை விட்டால், தகுதியானவர்கள் எவருமில்லை - மேர்வின் சில்வா
ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளராக நிறுத்த விரும்பினால், பொது வேட்பாளராகும் தகுதி தனக்கு மாத்திரமே இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடவத்தை தளுகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தேடிக்கொள்வதில் எதிர்க்கட்சிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.
இதனால் பல இடங்களில் வாத விவாதங்கள் நடைபெறுகின்றன. எனினும் நாட்டில் இருக்கும் ஒரே பொது வேட்பாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.
அவரை விட்டால் தகுதியானவர்கள் எவருமில்லை. அவருக்கு மேலதிகமாக பொது வேட்பாளர் ஒருவர் தேவை எனில், அதற்கு தகுதியானவன் நான்.
எதிர்க்கட்சி விரும்பினால், அந்த சவாலை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் என்ற பதத்தில் தான் நாட்டு நிலைமை வந்து சேரும். உனக்கு புத்தி என்பதே கிடையாது. அதனால்தான் பதவிமோகம் பிடித்த நீ கத்தித்திரிகின்றாய். உன்னை ஜனாதிபதியாக ஆக்க உன்வீட்டில் வாக்களித்தால் பெரிய விடயம்தான். இல்ல தெரியாமத்தான் கேக்கிறன் உனக்கு ஜனாதிபதி நாற்காலியில் உக்கார ஒரு தகுதியை மக்களுக்கு எடுத்துச்சொல்லு பார்கலாம்.
ReplyDelete