Header Ads



''கேவலமானதாகும்''

அமைச்சரவையில் ஜனாதிபதியுடன் இருந்து கொண்டே முஸ்லிம் எம்பீக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவது தினமும் கூட இருக்கும் மனைவியுடன் பேச அடுத்த வீட்டுக்காரனை தனது மனைவிக்கு கடிதம் எழுதச்சொல்வது போன்ற கேவலமானதாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. 

இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
முஸ்லிம் எம்பீக்கள் ஒன்று பட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவது இது முதற்தடவை அல்ல. எப்போது தாங்கள் கையாலாகாதவர்கள் என்பது மக்களுக்கு தெரியவருகிறதோ அப்போது தாங்கள் ஒன்று படுவது போல் மக்களுக்கு காட்டி இவ்வாறு மக்களை ஏமாற்றுவது முஸ்லிம் கட்சிகளின் வழமையான நடவடிக்கையாகும். கடந்த வருடம் மஹியங்கனை பள்ளி மூடப்பட்ட போது அனைத்து எம்பீக்களும் ஒன்று பட்டு இது விசயமாக பேச ஜனாதிபதியிடம் பேச நேரம் கேட்டிருந்தனர். ஆளுங்கட்சியில் அமைச்சர்களாக இருந்து கொண்டே கொஞ்சம் கூட வெட்கமின்றி ஏதோ தாங்கள் எதிர்க்கட்சியில் இருப்பதாக நினைத்துக்கொண்டு கடிதம் எழுதினார்கள். கடைசியில் அந்த கடிதத்துக்கு ஒரு பதில் கூட வரவில்லை. இதற்கான பதில் வராமைக்கான காரணம் இது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுவதற்கான வேலை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். அத்தோடு மஹியங்களை பள்ளி பிரச்சினையையும் முஸ்லிம் சமூகம் மறந்து விட்டது.
 
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத ஒரு கட்சி இலகுவில் ஜனாதிபதியை சந்திக்க முடியாது என்பதால் அக்கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழதுவதில் நியாயம் உண்டு. ஆனால் அரசின் அமைச்சர்களாக அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு ஜனாதிபதியுடன் அனைத்து இடங்களுக்கும் சுற்றிக் கொண்டே முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதிக்கு எடுத்துச்சொல்லாமல் கடிதம் எழுதுவது மிகப்பெரிய நகைச்சுவையும் அப்பாவி முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதுமாகும்.  
 
ஆகவேதான் நாம் சொல்கிறோம்,  இவ்வாறு  கடிதம் அனுப்பி மக்களை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு முஸ்லிம்கள் பிரச்சினையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டிருந்தால் அனைத்து எம்பீக்களும் ஒன்று சேர்ந்து பொதுபலசேனாவையும் அதற்கு ஊக்கமளிக்கும் அரசாங்கத்தையும் கண்டித்து பகிரங்க கூட்டம் ஒன்றை நடத்த முன்வர வேண்டும். இவ்வாறான கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய இவர்களுக்கு முடியாவிட்டால்  கல்முனையில் இதற்கான பகிரங்க மேடை ஓன்றை ஏற்பாடு செய்து தர நாம் தயாராக இருக்கிறோம். முஸ்லிம் எம்பீக்கள் கலந்து கொள்ள தயாரா என்பதை அவர்கள் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை 

5 comments:

  1. இது யாரோ உங்களுக்கு சொன்ன உதாரணம் போன்று தெரிகின்றது

    மௌலவி தாங்கள் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும் மௌலவி என்பதை மறந்து வடாதீர்கள்.

    ReplyDelete
  2. முஸ்லிம் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது என்பது ஒரு பகிரங்கமான பம்மாத்து என்பதில் ஐயமில்லை.

    மேலும், வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சிலாகித்துள்ள இந்த முஸ்லிம் எம்பிக்கள், மன்னார் மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவு முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளை இலங்கையின் இராணுவமே அடாத்தாகப் பிடித்துக் கொண்டிருக்கும் பச்சை அநியாயத்தை ஒரு வரியிலேனும் சுட்டிக்காட்டவில்லை.

    தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதயடுத்து முஸ்லிம் கவுன்சில் அவசரமாகக் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட இந்த முஸ்லிம் எம்பிக்கள், அப்போதே ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கும் தீர்மானித்திருந்தனர். எனினும் எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்து வைக்காமல் பலர் அன்று நழுவிச் சென்றனர். இப்போது 2 வருடங்களின் பின் இவர்கள் கையொமிப்பிட்டு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

    மாத்திரமன்றி, வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் பற்றி இத்தனை அக்கறையுடன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் மறிச்சுக்கட்டியில் இரண்டு மாதங்களாக அவஸ்தைப்படும் முஸ்லிம்களைச் சென்று பார்த்து அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்கியுள்ளனர்?

    ஒட்டு மொத்தத்தில் இது ஒரு உப்புச் சப்பில்லாத கடிதமும், அர்த்தமற்ற செயற்பாடுமேயாகும். எல்லாம் எதிர்வரும் தேர்தல்களின்போது 'நாங்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதிக்கு எழுத்து மூலமும் தெரியப்படுத்தி இருக்கின்றோம்' என்று வாக்காளர்களிடம் சொல்வதற்குத்தான்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. முஸ்லிம் எம்பீக்கள் ஆக குரய்ந்தது கடிதமாவது எழுதுகிறார்கள். பெரும்பான்மையினர் வாயுமில்லை-எழுதுவதுமில்லை, சும்மவே நடுங்கிக்கொன்று இருக்கிறார்கள்!

    ReplyDelete
  4. உங்களுக்கு அரசியல் வாதிகளை விமர்சிப்பதே தொழிலாபோச்சு...நீங்க விமர்சிப்பத தவிர முஸ்லிம்களுக்கு என்ன செஞ்சிருக்கிங்க... நீங்க வெறும் வெத்து வேட்டு...உங்களுக்கும் SLMC ல ஒரு சீட்டு தந்தா அவங்களுக்கு ஜால்ரா போட்டுகிட்டு இருப்பீங்க...அது கிடைக்கல்லையன்கிற வேக்கடுதான் இதல்லாம் என என்ன தோணுது...

    ReplyDelete
  5. அடுத்தவனுடைய குறைய தேடாமல் உங்களால என்ன செய்ய முடியும் என்று பார்த்து அத மட்டும் செய்யுங்க. நீங்க அவர சந்திக்க முடியும் என்றால் சந்திச்சு பேசுங்க, நாட்டு நடப்ப பத்தியும் நாசமாப்போன பொது பல சேனா பற்றியும் சொல்லுங்க. உங்களுக்கு என்ன சொன்னாரு என்று உண்மைய மட்டும் அப்படியே வந்து சொல்லுங்க.

    ReplyDelete

Powered by Blogger.