Header Ads



'நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க, பௌத்த பிக்குகளின் ஆலோசனைகளை அடிக்கடி எதிர்பார்க்கின்றோம்' கோத்த

பௌத்த பிக்குகளின் ஆலோசனை வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க பௌத்த பிக்குகளின் ஆலோசனை அடிக்கடி எதிர்பார்க்கின்றோம்.

மருதானை ராஜசேகரராமயவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகளான நீடித்த போரின் போது பௌத்த பிக்குகளின் ஒத்துழைப்பு முக்கியமானது. போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்த பிக்குகள் ஒத்துழைப்பு வழங்கினர்.

இன்றும் முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களின் சில கிராமங்களை பௌத்த பிக்குகளே பாதுகாத்து வருகின்றனர். குறித்த மாவட்டங்களில் வாழ்ந்து வந்த அப்பாவி சிங்கள மக்களை விரட்டியடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை பௌத்த பிக்குகள் தடுத்துள்ளனர்.

நாட்டில் விஹாரைகள் இருந்திருக்காவிட்டால் பௌத்த உரிமைகளை பாதுகாத்திருக்க முடியாது. பௌத்த மத உரிமைகளை உறுதி செய்ய பிக்குகள் வழங்கி வரும் ஆதரவு அளப்பரியது. மஹா சங்கத்தினரை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.




2 comments:

  1. நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக இருந்து கொண்டே இவர் தெரிவித்திருக்கும் இக்கருத்துக்கள் முப்படையினரையும், காவல்துறையினரையும் பகிரங்கமாக அவமதிக்கும் கூற்றாகும்.

    ஃஃஇன்றும் முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களின் சில கிராமங்களை பௌத்த பிக்குகளே பாதுகாத்து வருகின்றனர். குறித்த மாவட்டங்களில் வாழ்ந்து வந்த அப்பாவிச் சிங்கள மக்களை விரட்டியடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை பௌத்த பிக்குகள் தடுத்துள்ளனர்ஃஃ என்றகோத்தாவின் இக்கூற்று, நாட்டின் முப்படைகளின் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கின்ற மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையாலாகத்தனத்தையும் பறைசாற்றுகின்றது.

    மேலும் நாட்டின் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் சில பௌத்த தீவிராத தேரோக்களினாலும், அவர்களின் அடிவருடிகளாலுமே இன்று சீர்குலைந்திருக்க, பௌத்த தேரர்களின் ஆலோசனையைப் பெற்றே இந்நாட்டின் தேசிய நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தலாம் என இவர் கூறியிருப்பதும் நகைப்புக்கிடமானது. ஏன் ஏனைய சமய அறிஞர்கள் ஐக்கியத்திற்கு ஆலோசனைகள் தெரிவிக்க மாட்டார்களா?

    -புவி. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. பெளத்தம் பெளத்தம் என்று சொல்லி சகோதரத்துடன் வாழும் சிங்கள முஸ்லிம் மக்களிடையே விரோதத்தை உண்டாக்கி நாட்டில் மீண்டுமொரு சீர்குலைவை உண்டாக்கும் விரோதி உன்னைப்போன்ற தேச துரோகிகள் அரசாங்கத்துடன் இருப்பதுதான் இன்றைய முக்கியமான பிரச்சினை. ஜனாதிபதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் தலைவலியும் நீதான். இதை ஜனாதிபதி உணர்ந்து சரியான தீர்வெடுக்கும் நாள் ஏற்கனவே கடந்து விட்டது. இருப்பினும் இனிமேலாவாது அது நடக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக நடக்காது. ஆக. மோத்தம் உன்னால்தான் நாட்டில் பிரச்சினை.

    ReplyDelete

Powered by Blogger.