Header Ads



''சிறு­ பிரச்­சி­னை­களை பெரி­துப்­ப­டுத்தி சர்­வ­தேச அளவில் கொண்டுசெல்­ல முஸ்­லிம்கள் எத்­த­னிக்­கின்­றனர்''


மதவிவ­கா­ரங்கள் தொடர்பில் ஆராய அமைக்­கப்­பட்­டுள்ள விசேட பொலிஸ் பிரி­வினை உட­ன­டி­யாக கலைக்க வேண்டும். இதனைப் பயன்­ப­டுத்தி முஸ்­லிம்கள் சர்­வ­தேச அளவில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே திட்டம் தீட்­டி­யுள்­ளனர் என ராவணா சக்தி அமைப்பு கோரியுள்ளது.

மத விவ­கா­ரங்­க­ளுக்­கான பொலிஸ் பிரி­விற்கு எதிர்ப்புத் தெரி­வித்து நேற்று பௌத்­த­சா­சன அமைச்­சிற்கு சென்ற ராவணா சக்தி அமைப்பின் செயலாளர் இத்தேபான சத்தா திஸ்ஸ தேரர் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மதவிவகார பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தனவிடம் கையளித்துள்ளார்.

இதன்­போது ராவணா சக்தி அமைப்பின் பொதுச் செய­லாளர் இத்தேபான சத்தா திஸ்ஸ தேரர் கருத்துத் தெரி­விக்­கையில்;

இலங்­கையில் மத அடக்கு முறைகள் மிகக் குறை­வா­கவே உள்­ளது. பெரும்­பான்மை இனத்­த­வ­ரினால் ஒரு­போதும் சிறு­பான்மை மதத்­த­வர்கள் ஒடுக்­கப்­ப­ட­வில்லை.

எனினும், சிறு­சிறு பிரச்­சி­னை­களை பெரி­துப்­ப­டுத்தி சர்­வ­தேச அளவில் கொண்டு செல்­லவே முஸ்­லிம்கள் எத்­த­னிக்­கின்­றனர். தற்­போது மதப் பிரச்­சி­னைக்­கான பொலிஸ் பிரிவு அமைக்­கப்­ப­ட்டுள்ளதனால் நாட்டில் மத அடக்கு முறை தலைவிரித்தாடுகின்றது என்ற செய்தி சர்­வ­தே­சத்­திடம் எடுத்துச் செல்லப்படுகின்றது. இது ஒரு­சி­லரின் திட்­ட­மிட்ட சதித்­திட்­ட­மாகும்.

ஜனா­தி­பதி இதனை உட­ன­டி­யாக கவ­னத்திற் கொண்டு மத விவ­காரப் பொலிஸ் பிரி­வினை தடை­செய்ய வேண்டும். ஒரு­சில சூழ்ச்­சிக்­கா­ரர்­களின் கதையைக் கேட்டு ஜனா­தி­பதி தவ­றான முடி­வு­களை எடுத்து விடக்­கூ­டாது.

மேலும், எதிர்­வரும் வெசாக் தினத்­திற்கு முன்னர் இந்தப் பொலிஸ் பிரி­வினை கலைக்­க ­வேண்டும். இல்­லையேல் மோச­மான பின் விளை­வு­களை அனை­வரும் எதிர்­கொள்ள வேண்டிவரும். இதனை நாம் கடு­மை­யாக எச்­ச­ரித்து குறிப்­பி­டு­கின்றோம். இதற்கு மேலும் மத விவ­காரம் தொடர்பான பொலிஸ் பிரி­வினை செயற்படுத்தினால் பௌத்தசாசன அமைச்சினுள் எமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் அமைச்சுக்குள் உட்பிரவேசித்து எமது அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

4 comments:

  1. You initiate THEN You yourself wanted to terminate, when you realize it is going to slap back at you.

    You wanted to DO what ever you wanted... BUT no system should be there to POINT at you.

    We Ask the CREATOR, who created YOU, US and all in with this UNIVERSE to JUDGE on your ACTION.

    We keep patience still for sake that WE ARE BEING TAUGHT to cultivate for PEACE but not for VIOLENCE. Further Majority of SRI Lankans wanted to live in harmony with other ethnics... BUT it is unfortunate for the country to have FEW RACISTS who spoil their OWN religion and HATE other's belief.

    The future generation will be confused of the philosophy of your religion due to the ACTION of handful people.

    Shame,.. STOP Hate rates and Cultivate Peace. This is a SWEET LAND of all its CITIZENS.

    ReplyDelete
  2. இலங்கையின் மக்கள் சனத்தொகையில் 10 வீதத்திலும் குறைந்தளவுள்ள முஸ்லிம்களை. உம்மைப்போன்ற பயங்கரவாதிகள் தற்போது செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றும் பட்டியலிட்டுக்காட்டினால் அவை உனக்கு சிறு பிரச்சினை?

    முஸ்லிம்கள் அமைதியாகவும் பொறுமையுடனும் இதுவரைக்கும் இருக்கின்றார்களே அதுதான் அவர்களின் நாகரீக்மும் இஸ்லாம் கற்றுத்தந்த முறையும்.

    பெளத்தன் பெளத்தன் என்று சொல்லி காவி உடையையும் அணிந்து கீழ்த்தரமா காரியங்களெல்லாம் செய்துகொண்டு உண்மையான பெளத்தர்களையும் அசிங்கப்ப்டுத்தும் உன்னைப்போன்றவர்களுக்கு நாம் பதிலடி தருவதைவிட நாம் மதிக்கும் பெளத மக்களே உம்மைப்போன்றவர்களுக்கு உரிய பதில் தருவார்கள் என்று நாம் இன்னும் எதிர்பார்க்கின்றோம்.அதை இன்னும் எதிர்பார்த்தவர்களாகவே பொறுமை காக்கின்றோம்.

    நீங்க பள்ளிவாசல்கள் உடைக்கலாம் முஸ்லிம்களை என்னவேண்டுமானாலும் பேசலாம் சட்டங்களை உமது விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம், இது எமது நாடு, நாம் சொன்னவாறுதான் நீங்கள் நடக்கவேண்டும் இல்லையானால் வெளியேறவேண்டும். என்றெல்லாம் சொல்லலாம். நீங்கள் என்ன செய்தாலும் மற்ற மதத்தவர்கள் கேட்கவேண்டும் அது அனியாயமானதென்றாலும் பரவாயில்லை. உன்னைப்போன்றவர்கள் மனிதர்களின் வயிற்றில் இருந்துதான் பெற்றார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    உம்மைப்போன்ற பயங்கரவாதிக் கும்பல்கள்தான் இன்று உண்மையான பெளத மதகுருமாருக்கும் பெளத்தத்திற்கும் நாட்டுக்கும் பெரும் அவமானமும் தலைவலியும். அதைவிட முக்கியமானது நாட்டின் தற்போதைய குழப்பங்களுக்கும் நாட்டின் பின்னடைவுக்கும் காரணம்.

    ஆக நாம் இன்னும் மதிக்கும் பெளத்த சகோதர சகோதரிகளும் பெரியோர்களுமே. இவர்களுக்கு நல்லதொரு பாடத்தை புகட்டுவதன்மூலம் நாட்டில் ஒற்றுமையை நிலைதூக்கி எதிர்கால் சந்ததிக்காவது முன்னேற்றப்பாதைகளை திறந்து கொடுப்போம்.

    ReplyDelete
  3. Very good monk whatever u can do it becouse difence minsitry&excutive president in all ur. pocket so minority muslim what will do but we strongly belieive in ALLAH dont forget all of monk in srilanka . So in srilanka all of muslims want peace.not voilent. But some budish fection like bbs.raweya & others r make problem w/ muslim .so it is.not good for ?????

    ReplyDelete

Powered by Blogger.