யாழ் சின்னப்பள்ளிவாசலின் முஸ்லீம் மையவாடி சிரமதானம்
யாழ் சின்னப்பள்ளிவாசலின் முஸ்லீம் மையவாடி சிரமதானம் யாழ் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.ம்.ஏ அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.
நீண்ட காலமாக யுத்தத்தினால் காடாக காணப்பட்ட இம்மையவாடி பொதுமக்கள் ,இராணுவத்தினர் இணைந்து சிரமதானங்களை மேற்கொண்டனர்.
இதன் போது நாவாந்துறை 23 ஆவது கஜபா இராணுவ வீரர்கள் லெப்ரினன்ட் பிரியந்த தலைமை தாங்கினார்.
சமூக சேவையாளர் கே.எம் நிலாம் தலைமையில் எதிர்காலத்தில் மையவாடியை சிறந்த முறையில் பராமரிப்பதற்கென குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன்,இக்குழு ஜனாசாக்களை இனிவரும் காலத்தில் இலகுவாக அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment