கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மீது கல்வீச்சு
(அஸ்-ஸாதிக்)
கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மீது நேற்றிரவு 16.05.2014 இனந்தெரியாத கும்பல் கல்வீச்சு நடாத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் இப்பாடசாலையின் பெயர் பதாகையை சேதப்படுத்திய கும்பல் பாடசாலை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். மேலும் பாடசாலையில் வகுப்பறைக்கு ஓட்டுக்கூரையின் மீதும் கற்கள் எரியப்பட்டமையதால் பிரதான மண்டபத்தின் வகுப்பறையும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கம்பளை வலய கல்விப் பணிமனை வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
.jpg)
காதர் எம்.பி.யின் 'வீடு' தேடி BBS வந்து விட்டது.........!!!! வேறு வழியில்லை.... இப்போது அவர் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்....????
ReplyDelete