Header Ads



பௌத்த தேரர்களிடம் மன்னிப்பு கேட்கவுள்ள தவ்ஹீத் ஜமாஆத்

(நஜிப் பின் கபூர்)

புத்த பெருமானையும் பௌத்த சமயத்தையும் நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ராசீக் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டிருப்பதுடன் இதற்காக தான் மா நாயக்க தேரர்களிடம் மன்னிப்புக் கோர இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். 

அத்துடன் அகில இலங்கை தவ்ஹீத் அமைபின் செயலாளர் அப்துல் ராசிக் சார்பில் இன்று 20-05-2014  நீதி மன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணிகளும் தனது வாடிக்கையாளர் இது விடயத்தில் தவறிழைத்திருப்பதாக ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்திருப்பதுடன், அவர் அதற்காக பௌத்த மா நயக்க தேர்களிடம் மன்னிப்புக்கோர இருப்பதாகவும் இன்று இந்த வழக்கு கொழும்பு நீதி மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது தெரிவித்திருக்கின்றார்கள். எனவே இதன் பின்னர் இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய வீடியே ஒளி,ஒலி நாடக்களை ஊடகங்களிலோ இணையத் தளங்களிலோ  ஒலிபரப்பக் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

5 comments:

  1. உண்மையை உள்ள படி சொல்லுவூம் என்டு சொல்லிதான் முஸ்லிம்களை பிரித்து ,ஒரே ஊரில் இரண்டு ஜும்ம்ஹா கலை உருவாகி ,முஸ்லிம்களை பிரித்தது மாதிரி சின்ஹலவர்களையும் பிரிக்கலாம் என்டு பஹல் கனவு கண்டர்களா?? இபோதவது இக்கூட்டம் உணருமா ???

    ReplyDelete
  2. islathil sollappatta veahak kattuppaattai thandich chelvathanal varum vifareethame ithu.oru nalum ivarhal nawai adakki seyalpada mattarhal.

    ReplyDelete
  3. இலங்கை முஸ்லிம்கள் உண்மையில் முட்டால்களா? அல்லாஹ்வை உருவப்படுத்தி பொம்மை ஒன்றை பகிரங்கமாக கேவலப்படுத்தி ஊர்வலம் சென்றார்களே இன்வாத பௌத்த அமைப்புக்கள், அப்போ, அந்தேரம் நீங்கள் எல்லாம் எங்கு இருந்தீர்கள்?சட்டமும் வழக்கும் பௌத்தர்களுக்கு மட்டும்தானா?சட்டப்புத்தகத்தை படித்த கெடாவனுகள் என்ன செய்கிறானுகள்?

    ReplyDelete
  4. *அஞ்சுவதும் அடிபனிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே*
    இப்ப மட்டும் தேரரிடம் மன்னிப்பு கேக்கலாமோ....சண்டியன் ஜமாத் SLTJ கூக்குரலிட்டு முடிஞ்சா.........

    ReplyDelete
  5. முஸ்லிம்களுக்கு எவ்வளவோ தீங்குகள் செய்துள்ளார்கள், அதேவேளை தெளஹீத் ஜமாத்தினரோ அல்லது வேறொரு ஜமாத்தினரோ வெறும் வார்த்தையால் சொன்னதற்கு மன்னிப்பு கேட்கும் நிலைமை. தப்லீக் தெளஹீத் நமது உள்வீட்டு பிரச்சினை அது ஒரு புறம் இருக்கட்டும்.

    ஆக நாம் இதிலிருந்தும் இதற்கு முன்பு நடந்தவைகளை வைத்தும் தீர்மானிக்க வேண்டியது. கத்தி கூச்சலிட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. நிலைமை இன்னும் மோசமாகவும் நமக்கெதிரானதாகவும் தான் மாறுமே தவிர வேறில்லை. மாற்று வழிகளை கையாழுவதே நமக்கு சிறந்தது. தற்போதைய காலகட்டத்தில் அறிவுக்கு மட்டுமே வேலை. காதும் காதும் வைத்தால்போல காரியங்களை சாதித்துவிட்டு பேசாமல் இருப்பதே சிறந்தது. அரசியல்வாதிகள் சிலர் வாய்மூடி பார்த்துக்கொண்டிருப்பதன் அர்தம் நமக்கு இன்னும் புரியவில்லை, அதை அல்லாஹ் நன்கறிந்தவன். அதேவைளை, நாட்டில் மதங்களுக்கெதிராக எதுவித வன்முறைகளும் நடக்கவில்லை என்று சொல்லும் சில முனாபிக்குகள் இருக்கின்றார்கள், அவர்களை விடுங்கள் அவர்கள் தமது பதவிக்காக எதையும் (கூ)காட்டிக்கொடுக்கவும் தயாராக உள்ளார்கள்.

    அதிகம் இறைவனிடம் பிரார்த்திப்பதன் அவசியம் உணரப்படவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.