'எமது ஆதரவு பெற்றுக்கொள்ள முடியும் என ஐ.தே. க. எண்ணியிருந்தால் அது முட்டாள்தனம்'
ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் நோக்கிலானது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா திர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
தீர்மானத்திற்கு எமது ஆதரவு பெற்றுக் கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி எண்ணியிருந்தால் அது அவர்களின் முட்டாள்தனத்தையே பிரதிபலிக்கின்றது.
போதைப் பொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அசராங்கம் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
போதைப் பொருள் கடத்தல், வைத்திருத்தல் மற்றும் விநியோகம் போன்ற குற்றச்சாட்டின் பேரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கசினோவுக்கே வெளியிலிருந்து ஆதரவு கொடுத்த பெருந்தன்மை கொண்ட தலைவர் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக ஆதரவு கொடுக்க முடியாதுதான்...??
ReplyDeleteReally i don't know how he be came leader for srilankan Muslims, Worst person
ReplyDelete