Header Ads



பௌர்ணமி காலங்களில் அமைச்சர் விமல் வீரவன்சவின் புத்தி பேதலித்து விடும் - அமைச்சர் எஸ்.பி.


பௌர்ணமி காலங்களில் அமைச்சர் விமல் வீரவன்சவின் புத்தி பேதலித்து விடும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவை, எஸ்.பி; போன்றவர்கள் தேவையற்ற வகையில் போற்றி வருவதாகவும், பீ.பி. ஜயசுந்தர சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டியவர் எனவும் விமல் வீரவன்ச அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சில நபர்களுக்கு பௌர்ணமி காலங்களில் புத்தி பேதலிப்பது வழமையானதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலருக்கு இவ்வாறு குறித்த காலங்களில் சிந்தனை ஆற்றல் இருக்காது எனவும் அவ்வாறான தருணங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை பெரிதுபடுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்களுக்கு அனுதாபம் காட்டப்பட வேண்டுமே தவிர கோபப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமது கொள்கைகளை ஜனாதிபதி ஏற்க மறுத்தால் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்லப் போவதாக விமல் வீரவன்ச நேற்றைய தினம் மீண்டும் பகிரங்கமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. விமல் மட்டுமல்ல,ஆலும் கட்சிலுள்ள அனைத்தும் கோமாவிலும்,பேதலித்த நிலையுலும் தான் ஜடங்களாக பௌர்ணமிக்கு மட்டுமல்ல எல்லா நாட்களிலும் பொதுவாக வாழ்ந்துகொண்டிருக்கிறது,

    ReplyDelete

Powered by Blogger.