Header Ads



மஹிந்த ராஜபக்ஸ, இந்தியாவுக்கு பயந்து சீனாவுக்கு செல்லவில்லையாம்..!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றுப் பிற்பகல் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்கவே மகிந்த ராஜபக்ச சீனா சென்றுள்ளார். 

ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல் அமைப்பில், 23 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

இந்த அமைப்பில் சிறிலங்காவும், பார்வையாளர் நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் உள்ளிட். பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

இங்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், இந்த மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும், இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார். 

கடந்த ஆண்டு மே மாதமே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வரவுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனா செல்வது குறித்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

அதற்கு அவர், இந்தியாவுக்குப் பயந்து கொண்டு அவர் சீனாவுக்கு செல்லவில்லை என்றும், இது முன்கூட்டியே திட்டமிட்ட பயணம் என்பதால், அங்கு செல்லாவிட்டால் சீனா கொபித்துக் கொள்ளும் என்றும் கெஹலிய ரம்புக்வெல பதிலளித்துள்ளார்.

1 comment:

  1. எதற்கெடுத்தாலும் ஒரு வெளினாட்டுப்பயணம்,கூடவே,அதிக எண்ணிக்கையான சகாக்களும்,காலூண்ட ஒருவன், கையூண்ட ஒருவன், சவரம் செய்ய ஒருவன், மசாஜ் பண்ண ஒருவன், ஜட்டியை கழுவ ஒருவன், இப்படி பல பேரையும் கூட்டிக்கு செல்வதால்தான் இலங்கை அரசுக்கு செலவு கூடுகிறது, நஸ்டமடைகிறது, இதனைக்காக்கவே அதன் சுமைகளை இலங்கை வாழ் பிரஜைகளிடம் சுமையை தள்ளூகிறது, கேட்டால், மகிந்த சிந்தனை எங்கின்றனர்.

    அண்மையில், ரவிகருனானாயக்க,அரசிடம் ஜனாதிபதியின் வெளினாட்டு பயணங்களின் விபரங்களையும் அதன் செலவு, நோக்கங்களையும் வெளியிடுமாறு கேட்டது,ஆனால் மலுப்பிக்கோண்ட அரசு தரப்பு அவ்வாறு கேட்கக்கூடாது எனவும் தர்க்கம் புரிந்தது.

    சந்திரிக்காவின் ஆட்சியில் கூட்டனியாக ஜே.வி.பி இருந்த போது, ஜே.வி.பியின் சில கோரிக்கைகளை அரசு கேட்கனும்,நாட்டு நலவுக்காக செய்யனும் என்று வெளியிட்ட அந்த கோவையில், பாராளுமன்ற உருப்பிணர்களின் எண்ணிக்கையை குறைத்தல் உட்பட, வெளினாட்டு பயணங்களையும் முடிந்தளவில் குறைத்துக்கொள்ளல் என்பதையும் சேர்த்தது பலருக்கு நினைவிருக்கலாம்.

    எனவே, ஒரு வெளினாட்டுப்பயணம் என்பது....பல இலட்ச,மில்லியன் வீன் செலவுகளை உண்டுபண்ணக்கூடியவை என்பதை தூங்ககிக்கொண்டிருக்கும் இலங்கை மக்கள் உணர்ந்து விழித்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.