'நான் விரைவில் மரணிப்பேன் என்று உணர்கிறேன்' என்று கூறிய நடிகர் மஹ்மூத் வபாத்..!
ஜோர்தானில் தொலைக்காட்சி நாட கம் ஒன்றுக்கான படப்பிடிப்பில் மரணமடையும் காட்சியில் நடித்த நடிகர் உண்மையாக மரணமடைந் தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
"இரத்த சகோதரர்கள்" என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து வந்த 55 வயது மஹ்மூத் அல் சவல்கா என்பவரே இவ்வாறு மரண மடைந்திருப்பதாக பிரிட்டனின் மிர்ரர் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடிகர் வரலாற்று நாடகங்களில் நடித்து பிராந்தியத்தில் மிகப் பிரபலம் பெற்றவராவார்.
இந்த நாடகத்தில் அவர் பேசும் கடைசி வசனத்தையும் அவர் மாற்றி அமைத்து நடித்ததாக நாடகக் குழு குறிப்பிட்டுள்ளது. நாடகத்தில் அல் சவல்கா தனது மகனைப் பார்த்து பேசும் வசனத்தில், நீ என்னை உனது வெறுங்கையால் அடக்கம் செய்ய வேண்டும்" என்று இருந்தது. ஆனால் அதனை அவர், "நான் விரைவில் மரணிப்பேன் என்று உணர்கிறேன்" என்று மாற்றி அமைத்துள்ளார். இந்த வசனத்தை பேசி ஒரு சில நிமிடங்களில் அவர் மரணமடைந்துள்ளார்.
அல் சவல்கா மரணத்திற்கான காரணம் பற்றி பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மரணத்தை சிலர் இப்படி ஏதோ ஒருவகையில் நாம் கண்ட வகையில் முங்கூட்டியே அறிந்துள்ளார்கள்.அப்படியே மரணித்துமுள்ளார்கள். இறைவன் இவரது பாவங்களை மண்ணித்து அருள் வழங்கட்டும்.
ReplyDeleteஎந்த நிலையிலும் மரணிக்க தயாரானவனே முஸ்லிம்,ஆனால் நம் முஸ்லிம் அரசியல் வாதிகளோ,இந்த நினைப்பே இல்லை.வெரும் ஜடங்கள்.