Header Ads



பொதுபல சேனா தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராகவுள்ளேன் - அப்துல் காதர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாம் அவரைச் சந்திப்பதற்கு கடிதம் எழுதி அனுமதி பெறவேண்டுமா என்று பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் கேள்வியெழுப்பியுள்ளார்.

சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் இல்லத்தில் ஒழுங்கு செய்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள். அந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாவும், பிரதியமைச்சர்களாகவும், எம்.பிக்களாகவும் இருக்கிறோம். ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களிலும், ஆளும் கட்சிக் கூட்டங்களிலும் பங்குபற்றுகிறோம்.

இவ்வாறான நிலையில் எமது ஜனாதிபதி அவர்களைச் சந்திப்பதற்கென நாம் கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டுமா. இது என்ன புதுமையான கதையாக இருக்கிறது. எமது ஜனாதிபதியை எமக்கு எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். அப்படியிருக்கையில் கடிதம் எதற்கு. ஜனாதிபதி அவர்களை சந்திப்பதற்கு 16 முஸ்லிம் எம்பிக்கள் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், அக்கடிதத்தில் நான் கையெழுத்திடவில்லையென்றும் சிலர் கூறித்திரிகின்றனர். ஆனால், அக்கடிதத்தில் கையெழுத்திடுமாறு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள எந்தவொரு எம்பியுமே என்னிடம் கேட்கவில்லை.

இவ்வாறான நிலையில் எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் கூறித்திரிவது கவலையளிக்கிறது. நான் ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியைச் சேர்ந்தவன்தான். அதற்காக சமூகத்தின் நலன்களுக்காக எவரிடத்தில் சென்று பேசுவதற்கும் பின்நிற்கமாட்டேன். முஸ்லிம்களின் சமய, சமூக விவகாரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். தேவைப்படுமானால் பொதுபல சேனா தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நான் தயாராகவுள்ளேன்.

இந்தநாட்டில் நாம் ஒருபோதும் தனிநாடு கோரியவர்கள் அல்ல. அதேபோன்று எந்தவொரு இனத்துக்கும் எதிராகச் செயற்பட்டவர்களும் அல்ல. எப்போதும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நாட்டுப்பற்றுடனேயே செயற்பட்டு வருகின்றோம். 

நான் ஐ.தே.க உறுப்பினராக நீண்டகாலம் இருந்தேன். அக்காலத்தில் ஆற்றமுடியாத சேவைகளை, எமது ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் எமது மக்களுக்காக குறுகிய காலத்தில் செய்துகொடுத்திருக்கிறேன். கசினோ சூதாட்டத்துக்கு லைசன்ஸ் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அவர்களும், அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களும் அறிவித்தனர். 

அதற்கேற்ப நாம் ஆதரவாக வாக்களித்தோம். ஆனால் இதனை எதிர்த்தவர்கள் சபைக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அவர்கள் அதனைச் செய்யவில்லையென்றும் கூறினார். 

4 comments:

  1. do you have good name? what is that?

    ReplyDelete
  2. பொது பலசேனவிடம் என்ன பேசப்போறிங்க சார்.

    “ஊமையன பாடச்சொன்ன கதபோல இருக்கும்”.

    நிச்சயம் ஒரு நாள் மரணம் வரும், மரணத்தின் பின் கேள்விகள் கேட்கப்டும்.. உமது பதில அங்கு போச்சொல்ல தயாராக இரும்.

    இங்க நீங்க கிழித்தது போதும் முஸ்லிம்களுக்காக;.

    ReplyDelete
  3. Yes sano,
    He is name " ENEMY TO MUSLIM" &
    "General legal adviser in the BBS"

    ReplyDelete
  4. hello..! this is not the situation to worry about casino and it is no matter you vote for or against it. the question is, what you did for whole Muslim community and what was your action against BBS during the campaign against Halal, Hijab, Attack on Mosque, Attack on Muslim's Trade centers etc.. etc.. ? if you can meet the president any time just please do it even now, gather all other MPs and advice them to meet the president with your guidance and do it now.

    you all MPs doing only one same thing. we public know barking dog seldom bite. all of you will jump into the field during the election season. BBS also will be quiet in the election period as same as in the past west, southern provincial election.

    ReplyDelete

Powered by Blogger.