Header Ads



நாமல் ராஜபக்ஷவின் தொடரும் தோல்விகள்..!

(Rauf Hazeer)

FIVE NATION CHAMPION SHIP TROPHY - ASIA என்கிற கிண்ணத்திற்கான இன்றைய போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ MP தலைமையிலான இலங்கையின் தேசிய அணி மீண்டும் ஒரு தோல்வியை இன்று சந்தித்தது . கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ( குடும்பக் கம்பனி நிர்வாகத்தில் இருக்கும் ) றகர் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற மேற்படி போட்டியில் இலங்கை அணியை பிலிபீன்தேச அணி 26 க்கு 25 என்கிற புள்ளி வித்தியாசத்தில் கடைசி சில வினாடிகளில் வெற்றி கொண்டது .

தந்தை ஜனாதிபதி அவரின் பாரியார் சகிதம் வருகை தந்து பார்த்து ரசித்ததன் ராசி பலனோ தெரியாது வென்று கிடந்த போட்டியை கடைசி வினாடிகளில் இலங்கை அணி பிலிப்பீனுக்கு தாரை வார்த்தது .

இதன் மூலம்நாமல் தலைமையிலான இலங்கை அணி தொடர் தோல்விகளின் பட்டியலில் மேலும் ஒன்றை சேர்த்துள்ளது .

நாமல் ராஜபக்ஷவும், அவரின் இரண்டாவது சகோதரர் யோசித்த ராஜபக்ஷவும் களத்தில் இருந்தார்கள் . உம்மாவும் வாப்பாவும் பார்வையாளர் தளத்தில் இருந்தார்கள்

( இலங்கை தேசிய அணியின் தலைவராக வருவதற்கு பொருத்தமானவராக கணிக்கப்பட்டிருந்த முஸ்லீம் வீரர் கடந்த வருடம் மிகவும் சூட்ஷுமமான முறையில் அவரின் வாகனத்திற்குள் இறந்து கிடந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் . இப்போது நாமல்தான் அதன் தலைவர் )

2 comments:

  1. aniyathin mudivu vegu thuramillai

    ReplyDelete
  2. kaludaikku kedukaalam vandaal thalai therikka aadumaam. soolchikaararhalukkellam maha soolchikaran "ALLAH"

    ReplyDelete

Powered by Blogger.