யாழ்ப்பாணத்துக்கு கிழக்கே பெற்றோலிய அகழ்வு - பிரெஞ்சு நிறுவனத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ ஒப்புதல்
யாழ்ப்பாணத்துக்கு கிழக்கிலுள்ள கடற்படுகையில், சிறிலங்கா அராங்கத்துடன் இணைந்து பிரெஞ்சு பல்தேசிய எண்ணெய், எரிவாயு நிறுவனம் ஒன்று எண்ணெய் அகழ்வில் ஈடுபடவுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு கிழக்கே, தொடங்கி திருகோணமலை, மட்டக்களப்பு வரையான கடற்படுகையில், இந்த எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இயங்கும், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திக் குழு, பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து இந்த கூட்டு ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கான முழுச்செலவையும் பிரெஞ்சு நிறுவனமே பொறுப்பேற்கும் என்றும் சிறிலங்கா அதிபர், அமைச்சர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment