அமைச்சர்களை நியமிப்பதில் பாத்தாஹ் + ஹாமாஸுக்கு இடையில் இணக்கம்
பலஸ்தீனில் ஐக்கிய அரசொன்றில் அமைச்சர்களை நியமிப்பதில் எதிர் அமைப்புகளான பாத்தாஹ் மற்றும் ஹாமாஸ{க்கு இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
"பலஸ்தீனின் புதிய ஐக்கிய அரசில் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்போரின் பெயர் விபரம் குறித்து ஹமாஸ் மற்றும் பத்தாஹ்வுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட் டது" என்று ஹமாஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான மூஸா அபு+ மர்சூக் குறிப்பிட்டுள்ளார். காசாவில் இடம்பெற்ற பேச்சுவார்த் தைகளின்போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக மர்சூக் சுட்டிக்காட் டினார்.
இம்மாத இறுதிக்குள் பலஸ்தீனில் ஐக்கிய அரசு ஒன்றை அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஹமாஸ்-பத்தாஹ் எதிர்பார்த்துள்ளன. ஐக்கிய அரசு உருவாக்கப்பட்டதும் பலஸ்தீன நிர்வாகத்தின் தலைவராக செயற்படும் மஹ்மூத் அப்பாஸ் காஸாவுக்கு வருவார் என்று மர்சூக் குறிப்பிட்டார்.
பலஸ்தீனின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் மற்றும் எதிரி அமைப்பாக பத்தாஹ்வை உள்ளடக்கிய பலஸ்தீன விடுதலை அமைப்பு ஒன்றிணைந்து அங்கு ஐக்கிய அரசொன்றை அமைக்கும் உடன்படிக்கை கடந்த மாதம் கைச்சாத்தானது. இந்த உடன்படிக்கையின்படி பத்தாஹ்-ஹமாஸ் இணைந்து 5 வாரங்களில் ஐக்கிய அரசொன்றை அமைக்க வேண்டும் என்றும் ஆறு மாதங்களுக்குள் பலஸ்தீனில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஐக்கிய அரசு உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல், பலஸ்தீனத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தையையும் முறித்துக்கொண்டதோடு பலஸ்தீனத்தின் மீது மேலும் தடைகளை விதிப்பது குறித்து எச்சரித்தது.

Post a Comment