கம்பளை முஸ்லிம்களுக்கு எதிரான பிக்குகளின் போராட்டம் படுதோல்வி - பிரதமரின் துரித வருகை காரணம்
(அஸ்-ஸாதிக்)
கம்பளை நகரில் சில பௌத்த பிக்குகள் உட்பட சுமார் முப்பது பேர் இன்று 13.05.2014 நடாத்த முஸ்லிம்களுக்கெதிராக நடாத்த முற்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி பிசுபிசுத்துப் போனது.
இதில் கலந்து கொண்டவர்கள் கம்பளை சாஹிரா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவமொன்றைக் குறிப்பிட்டு முஸ்லிம்களுக்கெதிராக சுலோகங்களை ஏந்தியவாறு பேரணி நடாத்த ஆயத்தமாகியுள்ளனர்.
எனினும் பிரதமர் டி.எம். ஜயரட்ண மற்றும் மகாண சபை உறுப்பினர் அநுராத ஜயரட்ண ஆகியோர் கம்பளை நகருக்கு விரைந்ததையடுத்து மக்கள் ஆதரவின்றி பேரணி பிசுபிசுத்து கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பளை நகரில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு வெசாக் வலய நிகழ்ச்சிகள் பிரதமர் டி.எம். ஜயரட்ண தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

welcome prime minister..! thank you.
ReplyDelete