பள்ளிவாசலுக்கு சொந்தமான 40 பேர்ச் காணியை 3 துண்டுகளாக விற்பதற்கு நடவடிக்கை
(அஸ்ரப் ஏ. சமத்)
கண்டி கந்தாணை பிரதேசத்தில் தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் இருந்த பள்ளிவாசலுக்குச் சொந்தமான 40 பேர்ச் காணிகளை 3 துண்டுகளாக அளவையிட்டு விற்பதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை நிறுத்துவதற்கும் தொடர்ந்தும் இக் காணியை பள்ளிவாசலுக்கு தக்கவைத்துக்கொள்வதற்காக பள்ளிவாசல் நிர்வாகம் யாரிடம் பேசுவது ? கொழும்புக்கு வந்து அமைச்சர் விமல் வீரவன்சவை எவ்வாறு சந்திப்பது? என்று திண்டாடுகின்றனர்.
கண்டியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முகாமையாளரை பள்ளி நிர்வாகம் சந்தித்தும் பயணில்லை எனச் சொல்கின்றனர். முகாமையாளரின்; அரிவுறுத்தலுக்கமைய இதனை அமைச்சர் மட்டத்தில் சென்று இதனை நிறுத்துங்கள் என பள்ளிநிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
கண்டி கந்தாணையில் 100 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேயிலை இரப்பர் தோட்டமாக இருந்து வந்துள்ளது. அக்காலத்தில் அத் தோட்டத்தில் வேலை செய்தவர்களுக்காக ஒரு தமிழ் பாடசாலையொன்றும், ஹிந்துக் கோவிலும் முஸ்லீம்கள் தொழுவதற்காக சிறு தொழுகையறையும் இருந்துவந்துள்ளன. மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்களின் காலத்தில் இப் பிரதேசத்தில் 100 ஏக்கர் நிலத்தினை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு எடுக்கப்பட்டு 400 வீடுகள் கொண்ட தெடர்மாடி திட்டம் கண்டியில் தொழில் செய்த அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அப்போது 30 வருடங்களுக்கு முன் 30 முஸ்லீம்களும் இங்கு தொடர்மாடி வீடுகள் கிடைக்கப்பெற்ற இங்கு வாழ்ந்து வருகின்றனர். அதில் கட்டுகஸ்தோட்டை உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய எம். சித்தீக் இப் பள்ளிவாசலை அபிவிருத்தி செய்து அப்பிரதேசத்தில் வாழ்கின்றவர்களைக் கொண்டதொரு நிர்வாக சபையொன்றும் இயங்கி வருகின்றது. திட்டம் திறந்து வைத்தகாலத்தில் இருந்தே இப் பள்ளிவாசலுக்கு 40 பேர்ச் காணியும் கொடுக்கப்பட்டிருந்தது. அதே போன்று ஹிந்து கோவில் பாடசாலைக்கும் சமமாக காணிகள் கொடுக்கப்பட்டிருந்தது. இங்கு 2 சியாரங்களும் அடக்கப்பட்டுள்ளன. இப் பிரதேசத்தில் வருடாந்தம் முஸ்லீம்கள் ஒன்று கூடி கந்தூரி வழங்குதல், நோண்பு காலத்தில் முஸ்லீம் ஒன்று கூடுதல் 5 நேர தொழுகைகளில் ஈடுபடுவதற்கும் கடந்த 30 வருட காலமாக பாவிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் கொழும்பில் இருந்த சென்ற வீடமைப்பு அதிகார சபையின் நில அளவையாளர்கள் மற்றும் அதிகாரிகள் இக் காணியை 3 துண்டுகளாக அளவீடு செய்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கனு இட்டு அதனை பிரித்து பெரும்பாண்மையினருக்கு பிரித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பி;ண்னியில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கண்டி இணைப்பாளர் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் இவ்விடயம் சம்பந்தமாக கண்டி வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இவ் விடயம் சம்பந்தமாக உடணடியாக அமைச்சர் மட்டத்தில் நீங்கள் நடவடிக்கை எடுத்தால் இதனை தடுத்து நிறுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எனவும் சித்தீக் தெரிவித்த்hர்.
.jpg)
Post a Comment