பல தரப்பினரும் தம்மை தூற்றுவதாக, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு
இலங்கையின் வர்த்தக முறைமையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீசவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
முறையான பொருளாதார அபிவிருத்தி முறைமை ஒன்று இருக்குமாயின், அரச வருமானங்கள் குறைவடையாது என்று அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டார்.
இந்தவிடயத்தில் இருந்து வெளியேறுவதற்கு வழியை தேடிக்கொண்டு வர்த்தக முறையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்கும் போது பல தரப்பினர் தம்மை தூற்றுவதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டார்.

Post a Comment