சவூதி அரேபியாவில் எரிவாயு கசிவு - இலங்கை பெண் பாதிப்பு
ரியாத்தில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக இலங்கை பெண் ஒருவர் பாரிய எரிகாயங்களுக்கு உள்ளானார். ரியாத் தகவல் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து 50 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள அளுத்கமவை சேர்ந்த பாத்திமா ஷாபியா என்ற 38 வயது பெண்ணே பாதிக்கப்பட்டவராவார்.
இவர், தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல் மூலம் அறியவந்துள்ளது.
எனினும் இன்னும் ஐந்து நாட்களிலேயே அவருடைய உடல்நிலையி;ல் முன்னேற்றங்கள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவர் பணிப்பெண் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீப்பிழம்பும் ஏற்பட்ட போதே ஷாபியா பாரிய காயங்களுக்கு உள்ளானார்.
இந்தநிலையில் காயங்களுக்கு உள்ளான பெண் தொடர்பில் அவருடைய எஜமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பயன்பாடு தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Would like to know what our foreign employment Insurance policy (Bureau) will play the roll?
ReplyDelete