கம்பளை சாஹிரா கல்லூரி அதிபரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை
(அஸ்-ஸாதிக்)
கம்பளை சாஹிரா கல்லூரி அதிபரை வலயக் கல்விப் பணிமனைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கம்பளை சாஹிரா கல்லூரி நிர்வாகத்திற்கும் அதிபருக்கும் எதிராக பௌத்த பிக்குகள் கம்பளை நகரில் மேற்கொண்ட எதிர்ப்புப் பேரணியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலவரங்களை சுமூகநிலைக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று கம்பளை பொலிஸ் நிலையத்தில் 16.05.2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
கம்பளை பொலிஸ் பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜாலிய பண்டார கம்பளை வலய கல்விப் பணிப்பாளர் ஆனந்த பிரேமசிறி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இச்சந்திப்பில் சாஹிரா கல்லூரி அதிபர் எம். நிலாம்தீன் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் பாடசாலை முஸ்லிம் அசிரியர்கள்; பெரும்பான்மை ஆசிரியர்கள் சார்பில் தலா இருவர் மற்றும் பௌத்த பிக்குகள் கம்பளை ஜாதிக ஹெல உறுமய அமைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் இரு தரப்புக்கள் மத்தியிலும் ஏற்பட்ட தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இங்கு ஏற்பட்ட இணக்கப்பாட்டிற்கு இணங்க கம்பளை சாஹிரா கல்லூரி அதிபருக்கான கல்வி அமைச்சு முன்னெடுக்கும் விசாரனைக் காலப்பகுதி முடியும் வரை கம்பளை வலய கல்விப் பணிமனைக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று கல்வி அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment