Header Ads



லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் - ஜம்மியத்துல் உலமாவும், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலும் விமர்சனம்

இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, இங்கு பிரிட்டனில் இருக்கும் முஸ்லிம்களால் ஒரு கண்டன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு என்ற இயக்கத்தின் தலைமையில், பல சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டார்கள்.

பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக கோசமிட்டு ஆர்பாட்டை ஆரம்பித்த முஸ்லிம்கள், அங்கிருந்து ஊர்வலமாக இலங்கை தூதரகத்தை நோக்கிச் சென்றனர். பொதுபலசேனா உட்பட சில அமைப்புக்களின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலும், சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதிச் செய்யக் கோரியும் சில பாதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

அதேவேளை, இந்த போராட்டத்துக்கும் தமக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று இலங்கை உலமாக்கள் சபையும், இலங்கையில் உள்ள முஸ்லிம் கவுன்ஸில் என்ற அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. குறைகள் இருப்பின் முஸ்லிம்கள் பிரிட்டனுக்கான இலங்கை தூதுவரிடம் அது குறித்து முறைப்பாடு செய்யலாம் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.









6 comments:

  1. While our rights are demolished by the BBS, is it wrong to express our feelings, worries in a democratic way?? What else are we waiting for?? Are Jamiathul Ulama and Muslim council waiting for their daughters, mothers and sisters get raped??

    We do not have unity within ourselves. Jamiathul Ulama and Muslim council are not our leaders. They may be working for their own benefit and are cowards. When someone has Naleemi or Falaahi does not mean they know Islam. Ordinary Muslims know about Islam too and they have the right to raise voice as well.

    ReplyDelete
  2. உள்நாட்டில் பேசாமடந்தையாக,கோலையாக இருப்பவர்கள் வெளிநாட்டிலாவது எதிர்ப்பை தெரிவிப்பவர்களை தடுக்காதிருப்பது நல்லது,

    ReplyDelete
  3. பள்ளிகளை உடைக்கும்போது பேசுவதற்கு வக்கில்லாமல் கோமாவில் கிடந்த உலமா சபைக்கு லண்டனில் முஸ்லிம்கள் தமது தாய்நாட்டு மக்களின் உரிமைக்காக ஆர்ப்பாட்டம் செய்யும்போது மாத்திரம் விழிப்பு வந்து அறிக்கை விடுவது மிகவும் வேடிக்கையானது.

    முஸ்லிம் சமூகம் அவர்களது அறிக்கையை கால் தூசுக்கும் கணக்கெடுக்காது. எமது உரிமைப் போராட்டங்களை அடக்கவும் கொச்சைப்படுத்தவும் அரசியல் கைதிகளான உலமா சபைக்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது.

    பி.குறிப்பு -

    மதரீதியான விடயங்களில் மாத்திரம் இனிமேல் உலமா சபை வாயைத் திறந்தால் நல்லது. தேவையில்லாமல் அரசியலுக்கு சொம்பு தூக்கக் கிளம்பினால், அடுத்த அடி அதுக்காகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  4. Indha comment yaavazu poduveegala illa moodi maraipeegala

    ReplyDelete
  5. புரியலயே...

    இவங்க (அ,இ.ஜ. உலமாவும். கவுன்ஸிலும்)
    தப்பிக்கிறாங்களா?
    முஸ்லிம்களை பாதுகாக்கிறாங்களா?
    நடு நிலையில இருக்காங்களா?
    ஒடுக்கப்பட்டு இருக்கிறாங்களா?

    நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் எல்லோருக்கும் தெரியும் அதுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லையென்று.

    வழமைபோல பேசாமலே இருந்திருக்கலாம். (நடந்து முடிந்த பேரணி சரியோ தவறோ அது விவாதத்திற்குட்டபட்டது என்பது உண்மைதான்.)

    ReplyDelete
  6. Good move and well done. This is the only option we have now to send strong message to MR & Co.and Muslim World.

    ReplyDelete

Powered by Blogger.