'வஹ்ததுல் வுஜூத்' தொடர்பில் முக்கிய அறிவித்தல்..!
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான 'வஹ்ததுல் வுஜூத்;;' கொள்ளை தொடர்பில்-பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் ,காத்தான்குடி பள்ளிவால்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனமும்; இணைந்து 16-05-2014 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஜூம்மா பள்ளிவாயல்களில் ஜூம்மா தொழுகையின் பின்னர் ஒரு முக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
அவ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
1979ம் ஆண்டு நமதூரைச் சேர்ந்த மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) அவர்களால் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான 'வஹ்ததுல் வுஜூத்;;' எல்லாம் அவனே என்ற கொள்ளை தொடர்பான விவகாரத்தினை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு ,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ,முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சு,காத்தான்;குடி ஜம்இய்யதுல் உலமா ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ,உள்ளுர் மற்றும் தேசிய ரீதியான கல்விமான்கள்,தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் பல்வேறு கலந்துரையாடல்கள்,மாநாடுகள்,உடன்படிக்கைகள் போன்ற விடயங்கள் நடைபெற்றதை பொது மக்களாகிய தாங்கள் நன்கறிவீர்கள்.
இந்த வகையில் இறுதியாக கடந்த 2007-08-30ம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும், மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களுக்குமிடையில் வஹ்ததுல் வுஜூத்;;' கொள்கையை விட்டு நீங்குவது தொடர்பில் உடன்பாடு காணப்பட்டது.
அதில் மௌலவி அப்துர் ரஊப் அவர்கள் தான் கொண்டிருக்கும் எல்லாம் அவனே என்ற கொள்கை பிழையானது என்றும் இதன் பின்னர் வஹ்ததுல் வுஜூத்;;' கொள்கையை எண்ணத்தாலோ,சொல்லாலோ,செயலாலோ,கொள்கையாக ஆக்கிக் கொள்ள மாட்டேன் என்றும் உடன்படிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2007ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு அவர் வழங்கி இருந்த எழுத்து மூலமான உடன்படிக்கையை மீறும் வகையில் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி மேற்படி கொள்ளை சம்மந்தமாக அண்மைக்காலமாக ஆற்றிவரும் உரைகள் மூலம் அறியக் கிடைக்கின்றது.
இவ்விடயத்தினை அகில இலங்கை ஜமஇய்யதுல் உலமாவின் கவனத்திற்கு தகுந்த ஆதாரங்களுடன் கொண்டு சென்ற போது ,அவற்றைப் பரிசீலித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இவ்விடயம் தொடர்பில் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களையும் அவரது தரப்பினரையும் அழைத்து பேசி தீர்வு காண்பதென கூறியுள்ளது.
எனவே நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு பொது மக்களாகிய நீங்கள் பொறுப்புணர்வுடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என அவ் அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.jpg)
All the SAITAANS are in the field these days together fight against ISLAM from different angles.
ReplyDeleteUnless our brothers and sisters turn towards KNOWLEDGE ( Quran, Sunnah and the Understanding of SALAF us Saleheens )... it will be difficult to escape the trials.
May Allah Guide us in a way He guided Sahaaba, Tabieen and AtbaaUtTabieens (KNOWN as SALAF in ISLAM)
Refer to : Soora Nisah Verse 115 for proof.