Header Ads



சிறைச்சாலைகளிலிருந்து பொது மக்களிடமிருந்து கப்பம் அறவீடு - பொலிஸார் எச்சரிக்கை

மகர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகள் ஈ கேஷ் மூலமாக கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மஹியாங்கனை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகைகளில் வெளியாகும் சிறு விளம்பரங்களில் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவங்கள் குறித்து 10 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்திருந்தன.

இந்த சம்பவம் பற்றி அறியாத மஹியாங்கனை பிரதேசத்தை சேர்ந்த யுவதியும் அவரது உதவியாளரும் இதில் சிக்கியுள்ளனர்.

மகர சிறையில் இருக்கும் கைதி ஒருவரது பேச்சுக்கு மயங்கி காதலித்துள்ளார். அந்த கைதி யுவதிக்கு கையடக்க தொலைபேசி ஒன்றையும் மோதிரம் ஒன்றை பரிசளித்துள்ளார்.

கப்பமாக பெறப்படும் பணத்தை கைதி யுவதியின் மூலமாக பெற்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறையில் மற்றுமொரு கைதியின் மனைவியே ஈ கேஷ் மூலம் பணத்தை பெற்றுள்ளதுடன், வர்த்தகர் ஒருவரை மிரட்டி தம்முடன் இணைய செயற்பட வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 35 ஆயிரத்து 500 ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அறியாத எவருடனுடன் தொலைபேசி வாயிலாகவோ வேறு முறையிலோ கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டாம் என பொதுமக்களை  பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

1 comment:

  1. பாதால உலகம் இன்னும் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
    பயங்கரவாதத்தை அழித்ததாகக்கூறும் அரசியல்வாதிகள் ஏன் இவைகளை இன்னும் வைத்துள்ளார்கள்?இவைகளால் உயர் அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் இலாபமுண்டு அதனாலா?

    ReplyDelete

Powered by Blogger.