Header Ads



கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் கூட்டம்

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மே 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 9.15 மணியளவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 07, நெலும் பொக்குன மாவத்தையிலுள்ள நூதனசாலையின் கேட்போர்கூடத்திலேயே இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வின்போது அடுத்த நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் இதன்போது இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கொழும்பில் வாழும் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 0773630668, 0772987376 ஆகிய  தொலைபேசி இலக்கங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.