அல்-ஹிக்மா அஹதியா பாடசாலையின் 29வது வருட பூர்த்தி விழா
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
கொழும்பு-12 வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா அஹதியா பாடசாலையின் 29வது வருட பூர்த்தி விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று (04) அஹதியாவின் அதிபர் எம்.எப்.எம்.பாஹிம் தலைமையில் குணசிங்கபுர பிரதீபா மண்டபத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக கொழும்பு ஹமீத் அல்-ஹூஸைனியா பாடசாலையின் அதிபர் கெப்டன் என்.ரி.நசுமுதீனும் கௌரவ அதிதிகளாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் விமான நிலைய பொறுப்பாளர் எஸ்.எல்.மன்சூர், அல்-ஹிக்மா கல்லூரி அதிபர் கே,எம்.எம்.நாளிர், முன்னாள் கொழும்பு மாநகர ஆணையாளர் உமர் காமில், ஓய்வு பெற்ற ஆசிரியர் எச்.கரீம், மௌலவி தஸ்லிம், பொரளை அஹதியா அதிபர் ஷிப்லி ஹாசிம், அஹதியா சம்மேளனத் தலைவர் ஸரூக், காலபூஷணம் நாகூர் கனி, ஜஹாங்கிர் அலி உட்பட பல பிரமுகர்களும் விஷேட பேச்சாளராக எம்.ஷாபிர் ஹாசிமும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில் அஹதியா போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் விஷேட அதிகள், அஹதியா பாடசாலை ஆசிரியர்களும் பரிசில்கள் மற்றம் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment