பொது பல சேனாவின் பொறாமைத் தீ,,!
(றிசானா பசீர்)
பொதுப்பலசேனாவும் ஏனைய சேனைகளும் குறி வைத்திருப்பது முஸ்லிம்களின் பொருளாதாரத்தையாகும். இன்று பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டதாக காணப்படுகின்றது. பணம்தான் வாழ்வின் எல்லை என்பதை புட்டு வைக்கத் தேவையில்லை. நேரம் கூட பணமாகும்(Time is Money). கல்வி கற்றவனைக்கூடக் குருடனாக்கி பேரம் பேசும் சக்தி பணம் ஒன்றிற்கே தனித்துவமான பண்பு என்றால் அது மிகையாகாது. ஆயினும் கல்வியும் ஞானமும் தான் நிரந்தரமான செல்வமாகும்.
இறைவன்முஸ்லிம்களின் பொறுமையைச்சோதித்தக் கொண்டிருக்கிறான். ”பொறுமையுடையோராயின் நீங்களே மேலோங்கிவீர்கள்” என்பது திருக் குர்ஆனின் மூலமந்திரமாகும். முஸ்லிம்கள் மீதுள்ள பொறாமைக்கும் போட்டிக்கும்மிகப்பிரதான காரணம் பொருளாதாரமாகும். ரோட்டில் பஸ்ராண்டில் படுக்கும் பிச்சைக்காரனுடன் யாருக்கும் பொறாமை வருவதில்லை. பொறாமைக் குணம் என்னிடமும் இருக்கலாம். உங்களிலிடத்திலும் இருக்கலாம். பௌத்த பிக்குகளின் முழுமனமுமே பொறாமை நிறைந்ததாகக் காணப்படுகின்றது. மனித தர்மத்தை மதிக்கும் மனச்சாட்சி உள்ள பிக்குகளும் இல்லாமலில்லை. பொறாமைக்கு உண்மையான காரணம் பௌத்தர்களிடமுள்ள வசதிக் குறைவினால் ஏற்பட்ட எளிய வாழ்க்கைக் கோலமும் தாழ்வு மனப்பான்மையுமே. எமக்கு பொருளாதாரம் இல்லாவிட்டால் பொருளாதாரம உள்ளவர் மீது எரிச்சல் உண்டாவது வழமையானது. எளிய வாழ்க்கை கோலமும்தான் புணமுடியும். பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டு அவனை உயர்த்த முடியாது. அவன்அவனே பொருளாதாரம் தேட வேண்டும். அதற்காக வசதியாக வாழும் முஸ்லிம்களின் கடையைக் கொழுத்துவதா? அழுத்கடை கடை எரிப்பு ஒரு மட்டகரமான செயல்.
முஸ்லிம்கள் அதிகபிள்ளைப் பெறுவதையும் பொருளாதார ரீதியில் முன்கேறுவதையும் ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. புத்திசாலிக்கு அறிவுரை தேவையில்லை. முட்டாளுக்கு சொன்னாலும் புரியாது.
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கள் தனது மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதமொன்றின் முத்தான வரிகளில் ஒன்று………….
”எனது மகனின் மனதில் பொறாமை எனும் தீயகுணம் வந்து விடாமல் கவனமாப் பார்த்துக்கொள்ளுங்கள். மிக மிக கவனமாப் பார்த்துக் கொள்ளுங்கள்”. ஏனெனில் பொறாமை எனது மகனை எரித்துவிடும்”. பொறாமை எவனிடம் உள்ளதோ அவன் எரிந்தும் அழிந்தும் கொண்டுதான் இருக்கின்றான் என்பதை பௌத்த பிக்குகளுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன். மதத்தின் பெயரால் காவி கட்டி நடந்தவர் உண்டு. பெண்ணாலே காவி கட்டி நடந்தவர் உண்டு. ஆனால் பொறாமையால் காவி கட்டி நடந்தவர் உண்டா?
கெட்டநடத்தையுடையவன் நல்லவனை பார்த்து பொறாமைகொள்கிறான்.
முட்டாள் பண்டிதனை பார்த்து பொறாமைகொள்கிறான். ஒரு பெண்டாட்டி உள்ளவன் நான்கு பெண்டாட்டி உள்ளவனைப் பார்த்து பொறாமைகிறான். இல்லாதவனுக்கு இருப்பவனிடத்து பொறாமை. அழகில்லாதவள் அழகானவளைப் பார்த்து பொறாமை கொள்கிறாள். அண்மையில் லண்டனில் அழகான பெண் மீது அழகில்லாத நண்பி முகத்தில் அசிட் வீசி சிதைத்தாள்.
பொறாமையினால் தெளிந்த சிந்தை குழம்பி மனவருத்தமும் விரோதமும் வளர்கிறது. நம்மோடு ஒன்றாம் வகுப்பு படித்தவன், நாம் 100 மதிப்பெண் வாங்கும்போது இவன் 50 மதிப்பெண்தான் வாங்கினான். ஆனால் இன்று என்ஜினியர் ஆகிவிட்டானே என்று மனம்தாங்கிக் கொள்ளாமல் பொறுக்காமல் அவன் மீது பொறாமை கொண்டு தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளக்கூடியவனையெல்லாம் நாம் உலகத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படி இதுபோன்று பிறர் மீது பொறாமை கொள்பவன் பொறாமை கொண்டு, அவனுக்கு ஏதேனும் கேலிசெய்வது, அல்லது வேறெதாவது ஒன்றின் மூலம் பொறாமையினால் துாற்றி கொண்டே இருப்பது என பொறாமையால் பல விதமான கேடுகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஒருமனிதனின் வளர்ச்சிக்குத் தக்கவாறு அவன் மீது பொறாமை கொள்பவனின் கெடுதலும் இருக்கும். எவ்வளவு ஏற்றமோ அந்தளவுக்கு இறக்கமும் இருக்கும் என்பது போன்று. பொதுப்பல சேனாவினதும் எஞ்சிய ராவையினதும் நடவடிக்கை இந்த பொறாமையின் வர்க்கத்தின் வகைகளில் ஒன்றுதான்.
ஒருராஜாவின்அரண்மணையில் விசேஷஞானம் பொருந்திய குருவியும் அவருடன் நட்புடன் பாராட்டியபடி வளர்ந்துவருகிறது. நாளடைவில் ராஜாவிற்கு மகன்பிறக்கிறான் .குருவிக்கும்குஞ்சு பிறக்கிறது. இளவரசனும் இளம்குருவியும் அவர்கள் பெற்றோரைப்போலவே நட்புபாராட்டி விளையாடி வருகின்றனர்.ஒருசமயம், அவசரபுத்தி காரணமாக குருவிக் குஞ்சுவின் கழுத்தைநெரித்து, இளவரசன் கொன்று விடுகிறான். கடும்கோபம் கொண்டகுருவி, இளவரசனின் இருகண்ணையும் நோண்டி புண்படுத்திவிடுகிறது. முதலில்ராஜாகோபம் கொண்டுவெகுண்டாலும், தவறு இளவரசன் பேரிலும் இருப்பதால் குருவியை மன்னித்துவிடுகிறார். குருவிவேறு இடம்பறந்து செல்லஎத்தனிக்கிறது. ராஜாவோஇருசாராரும்மறந்து, மன்னித்துவிடுவொம், அதனால்இங்கேயேதங்கிவிடுஎன்றுகூறுகிறார்.அதனைமறுத்துகுருவி, "கடும்விரோதம்வளர்ந்தஇடத்தில், இருப்பதுஉசிதம்அல்ல. சிலதீங்குகள் எளிதில்மன்னிக்கப்படுவதும்இல்லை.அதன்பாதிப்புஅடங்குவதும்இல்லை. ஒருவரைஒருவர் அடிக்கடிசந்தித்தால் மனக்கசப்பும் வருத்தமும்மேலிடும், அத்தகையஉறவில் சுமூகம் இருப்பதில்லை.எனவேஎன்னைபோகவிடு" என்றுசொல்லிபறந்துவிட்டது.
விரோதத்தைமன்னித்துவிடுவதே உசிதம்என்றாலும்கூட எப்படிப்பட்ட விரோதம்என்பதைஆராய்ந்துஉறவின்பலமோ முறிவோ ஏற்படுகிறது.
திருக்குறள் கூறுவது போன்று ”ஒரு தவறை மன்னிப்பது விடுவது சிறந்தது. அதை மறந்து விடுவது அதிலும் மேலானது”.
பொறாமைக் குணம் ஆச்சரியமானது. பொறாமை நெருக்கமானவர்களுக்கு மத்தியில் தான் ஏற்படும்.அமெரிக்காவில் இருக்கும் ஒருவன் மீது இலங்கையில் இருப்பவன் பொறாமை கொள்ள மாட்டான். ஒரே ஊரில் இருப்பவா்களுக்குத்தான் பொறாமை ஏற்படும்.ஒரே நாட்டிலுள்ள மதங்களுக்கிடையில்தான் போட்டி பொறாமை நிலவும். அடுத்து ஒரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே தான்பொறாமை ஏற்படும்.
உங்கள் எதிரியால் ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டால் பொறுத்தக் கொள்ளுங்கள்.
‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ (2:153) திருக்குர்ஆன்.
என்ற குர்ஆன் வசனத்தை நினைத்துப் பாருங்கள்.பொறுமை மூலம் அல்லாஹ்வின் உதவியைப் பெறலாம். எனவே, பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் உதவி மூலம் உங்களது எதிரியை வீழ்த்த முயலுங்கள்,
ஒரு மனிதனிடமிருந்து நமக்குக் கேடு வருவதாக இருந்தால், பொறாமையினால்தான் கேடு வரும். நமக்கு எவன் கேடுசெய்தாலும் கண்டிப்பாக அதில் பொறாமை இருக்கும். அதனால்தான் தெரிந்தவர்களுக்குக் கேடுசெய்கிறார்கள். தெரியாதவர்களுக்கு மத்தியில் எந்தக் கேடும் நடப்பதில்லை. நீங்கள் யார்? என்று எனக்குத் தெரியாவிட்டால் நான் யார்? என்றுஉங்களுக்குத் தெரியவில்லையென்றால் நீங்கள் எனக்கு எந்தக் கேடும் செய்யமாட்டீர்கள். நானும் உங்களுக்கு எந்தக் கேடும் செய்யமாட்டேன். நீங்கள் உங்களது வேலையை மட்டுமே செய்துகொண்டிருப்பீர்கள். நான் எனது வேலையை மட்டுமேசெய்து கொண்டிருப்பேன். ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கின்ற இருவர் டீக்கடையில் வேலை பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவ்விருவரில் ஒருவர் இந்தியப்பிரதமர் மோடி என்று வைத்தக்கொள்வோம். மோடி பிரதமர் அல்லது கோடீஸ்வரனாக ஆகிவிட்டால், நம்மோடு வேலைக்குச் சேர்ந்தவன் பிரதமராகி விட்டானே கோடிஸ்வரனாகி விட்டானே என்று தன்னைத் தானே அங்கலாய்த்துக் கொண்டு அவன் மீது பொறாமை கொள்கிறான். டீக்கடை மோடி என்று கேவலம் செய்கின்றான். ஒரு இந்தியனை ஒரு இந்தியன் கேலி செய்கின்றான்.
இவரைத் தவிர இன்னும் பல பேர் அடித்தட்டில் இருந்து முன்னேறி கோடிஸ்வரர்களாக ஆகியிருப்பார்கள். அவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளமாட்டோம்.ஏனெனில் அவர்களை எமக்குத் தெரியாது.
பெரியளவுக்கு உங்களது வளர்ச்சி இருந்தால் உங்கள் மீது பொறாமை கொள்பவன் அதற்குத்தகுந்தமாதிரி பெரியளவுக்கு இடைஞ்சல் களையும் கேடுகளையும் செய்வான். உங்களது வளர்ச்சி சிறியளவுக்கு இருக்குமானால் பொறாமைக்காரனின் தீங்கும் அந்த வளர்ச்சிக்குத் தகுந்த மாதிரி இருக்கும். நீங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு முதலாளியாக இருந்தால் உங்களைத் திட்டும் அளவுக்கு அல்லது ஏதேனும் அவதூறு சொல்லும் அளவுக்கு உங்களது பொறாமைக்காரன் கெடுதல் செய்வான். ஆனாலும் அடிக்கிற அளவுக்கு போகமாட்டான். நீங்கள் மென்மேலும் மென்மேலும் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தால் உங்கள் மீது பொறாமை கொள்பவனின் பொறாமையின் கேடும் வளர்ந்து கொண்டே போகும்.அதனால் முஸ்லிகள் வியாபாரத்தை மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.எதுவெல்லாம் நமது வளர்ச்சிக்கு குறையையும் அபாயத்தையும் ஏற்படுத்துமோ அதையெல்லாம்கூட செய்வதற்கு தயங்க மாட்டார்கள்.ஏன்நமது உயிருக்குக்கூட உலைவைக்க தயங்கமாட்டார்கள். அழுத்கமையில் கடையைக்கொழுத்தினார்கள் அதனால், பொறாமைக்காரர்களின்தீங்குகளிலிருந்துநாம் பாதுகாப்புத் தேடவேண்டியது மிக முக்கியமானதாகும்.
இன்னும் சொல்லப்போனால் பொறாமைதான் பிறருக்குத் தீங்கு செய்வதற்கே முதல் காரணமாக இருக்கிறது.எனவேதான் ஏழு வானங்களுக்கும் மேல் அர்ஷிலிருந்து அனைத்து படைப்பினங்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுதான் சரியான வழியாகும். இன்னும் சொல்வதென்றால், ஒருவனுக்கு இறைவனால் கிடைக்கப்பட்ட அருட்கொடையைப் பார்த்து பொறாமைப்படுகிறான் என்றால் அதற்கு என்னிடம்தான் முறையிடவேண்டும் என்று சொல்லுகிறான் அல்லாஹ். பொறாமைக் காரன் பொறாமைப் படும்போதெல்லாம் நாம் திருப்பி எதுவும் செய்யத் தேவையில்லை. நாம் பதிலடி கொடுக்க வேண்டியதுமில்லை. யா அல்லாஹ்! என்மீது பொறாமைப் படுபவர்களின் பொறாமையிலிருந்து என்னைக் காப்பாற்று என்று அல்லாஹ்விடமே பாதுகாக்கின்ற பொறுப்பை சுமத்திவிட வேண்டியதுதான்.
காசுபணத்திற்குப் பொறாமை கொள்ளக்கூடாது. காசுபணத்தை நல்வழியில் செலவிடுவதில் பொறாமை கொள்ள வேண்டும். இவனுக்கு காசுபணத்தைக் கொடுத்துவிட்டாயே! அதை இல்லாமல் ஆக்கிவிடு! என்று சொன்னால் அதற்குப் பெயர்தான் பொறாமை.
இனக்கலவரத்தை ஏற்படுத்த மதிநுட்பமான வழி மதக்கலவரத்தை ஏற்படுத்துவதாகும்.இதை விட வேறுசிறந்த ஆயுதம் எதுவுமில்லை. சிங்களவரிலும் காடையர் இருப்பது போன்று முஸ்லிம்களிலும் காடையர்கள் உண்டு. ஆனால் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் காடையர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
”சிங்களக் காடையர்களுக்கும் முஸ்லிம் காடையர்களுக்கும் இடையில் சண்டை மூண்டு விட்டது என்றால் என்ன செய்வது என்பதே இப்போது நம் முன்னுள்ள கேள்வி ? தீர்வு என்ன ?
.jpg)
Post a Comment