பொதுபல சேனாவின் உண்மை நிலையும், அதனை எதிர் கொள்வதற்கான வழிமுறைகளும்
இன்று இலங்கையில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு விடயம்தான் பொது பள சேனா எனும் அமைப்பும் அதன் அத்துமீறிய அராஜக செயற்ப்பாடுகளும். மேற்படி இந்த அமைப்புப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதனைப் பார்க்கின்றோம். எனவே அந்த கருத்துக்கள் இங்கே பதியப்பட வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுகின்றேன்.
இதற்கிடையில் இந்த அமைப்பு தண்டிக்கப்பட வேண்டும் தடை செய்யப்பட வெண்டும் என்று கோரி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு மட்டங்களில் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்களும் அறிக்கைகளும் சுமார் கடந்த இரண்டு வருடங்களாக முன் எடுக்கப்பட்டும் இன்னும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.
இது தவிர இவையனைத்துக்கும் மேலாக பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் நீதி மன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் இவைகள் எதுவும் எவ்விதமான நாம் எதிர்பார்த்த எந்தவொரு பாதிப்பையும் அந்த அமைப்புக்கு ஏற்படுத்தியதாகவோ அல்லது குறைந்த பட்ச்சம் விசாரனையாவது செய்யப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனவே அவர்களுக்கு எதிராக ஜனநாயக முறையிலான இராஜதந்திர முன்னெடுப்புக்கள் எதுவும் எவ்வித பிரயோசனமம் அற்றவை என்பதனை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது. இப்படியான நிலையில் மீண்டும் மீண்டும் இவ்வாறான வழிமுறைகளின் ஊடாகவே தொடர்ந்தும் நாம் அவர்களை அடக்க முடியும் என்று நம்புவதும் அல்லது நாம் எதிர்பார்கின்ற எமது இலக்குகளை அடைந்து கொள்ள முடியும் என்று நினைப்பதும் அவ்வளவு தூரம் அறிவார்த்த நிலைப்பாடக இருக்க முடியாது என்றே கருதுகின்றேன்.
ஏனெனில் முஸ்லீம்களுக்கும்ää இஸ்லாத்திற்கும் எதிரான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அரசால் நேரடியாகச் செயல் வடிவம் கொடுக்க இயலாது என்ற ஒரே காரணத்தினால் அதனை நடைமுறைப்படுத்துவதற்காகவே என்று அரசாலயே உருவாக்கபபட்டதுதான் பொதுபள சேனா எனும் அமைப்பு என்பதனை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆக வேண்டியுள்ளது. எனவே எமது பார்வையில் பொது பள சேனா உத்தியோகப்பற்றற்ற அமைப்பாக இருந்த போதிலும் அரசிடம் அது முழுமையான உத்தியோகபூர்வமான அமைப்பாக மாத்திரமின்றி அதிகூடிய அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாகவும் இருக்கின்றது.
பொது பள சேனாவின் தேவைப்பாடு.
முப்பது வருட காலமாக நம் நாட்டில் புரையோடிப் போயிருந்த யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவந்த கையுடன் மீண்டும் அவ்வாறான ஒரு பிரச்சினை தலை தூக்காதிருக்க வேண்டும் என்றால் அனைத்து சிறுபாண்மை சமூகங்களையும் அடக்கி தமது பூரண கட்டுப்பாட்டுக்ககுள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேரும்பாண்மை இனவாதிகள் நினைக்கின்றார்கள். என்றாலும் அரசாங்கம் என்ற வகையில் அதனை நேரடியாக கையாள முடியாத நிலை உள்ளது. ஆதலால் பல காலங்களாக திட்டமிட்டதன் அடிப்படையில் அரசாங்கத்தால் கருவூட்டப்பட்டு பிரசவிக்கப்பட்ட சிறுபாண்மை சமூகங்களை அச்சுறுத்தும் அரசாங்கத்தின் ஒரு பிரத்தியேகப் படையனியே பொது பள சேனா என்பது. எனவே அதற்கு எதிரான நமது எத்தகைய முறைப்பாடுகளும் கோசங்களும் எந்தப் பலனையும் பெற்றுத்தரப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.
ஜனநாயக இராஜதந்திர முன்னெடுப்புக்கள் வெற்றியளிக்காமைக்கான காரணம்.
1. நினைத்த மாத்திரத்தில் தண்டிக்கவோ அல்லது தடை செய்யவோ பொது பள சேனா என்பது நாம் நினைப்பது போன்று ஒரு உத்தியோகப்பற்றற்ற அமைப்பு கிடையாது. அது அரசாங்கத்தால் நன்கு திட்டமிட்ட அடிப்படையில் சிறுபாண்மை இனங்களுக்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக செயலபடவென்றே திரை மறைவில் முறைதவறி பிறந்த அரசாங்கத்தின் எதேச்சதிகாரமான தினைக்களமேயாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
2. அது அரசில் ஜனநாயக முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும் அதன் செயற்பாடுகள் பாதுகாப்பு அமைச்சின் பூரண வழிகாட்டலுடனும் பாதுகாப்புடனுமே செயல்படுத்தப்பட்டுக்; கொண்டிருக்கின்றது.
3. அதன் அலுலவலகமே பாதுகாப்பு அமைச்சின்; செயலாளார் அவர்களால்தான் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அந்த திறப்பு விழாவின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உரையாற்றுகையில் : தற்பொழுது பௌத்த மதம் அதனைப் பாதுகாக்கக் கூடிய தகுதியாளர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறிப்பிட்டார். இதிலிருந்தே அவர்களுக்கு அரசினதும் குறிப்பாக பாதுகாப்புச் செயலாளரினதும் முழுமையான அங்கிகாரமும் ஆசிர்வாதமும் இருக்கின்றது என்பது உறுசி செய்யப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் மேற்படி அமைப்பை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆராய்ந்து அதற்கான சரியான வழிமுறைகளைக் கையாள்தல் அவசியமாகும். எனவே நாம் இதுகாலம் வரை முன்னெடுத்த ஜனநாயக வழிமுறையிலான ஆர்ப்பாட்டங்களையும் அறிக்கைகளையும் அவை எவ்வித எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தா விட்டாலும் நம் சமூகம் மறந்து விடாது அவதானமாகவும் விழிப்பாகவும் இருப்பதற்காக வேண்டி தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன் அவற்றுக்கான மாற்றுவழிகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
அந்த வகையில் நான் எனது கருத்துக்களை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன் சிலவேளை எனது இந்த கருத்துக்கள் மிதமிஞ்சியதாகக்கூட இருக்க இடமுண்டு.
எதிர் கொள்வதற்க்கான மாற்று வழிமுறைகளும்.
1. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்கிணங்க நாம் அவர்களின் வழியில் சென்றுதான் அவர்களை எதிர் கொள்ள வேண்டும்.
2. நாமனைவரும் கட்ச்சி மற்றும் இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று ஒரே தலைமையின் கீழ் ஒரே அனியாக நின்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்துவதன் மூலம் அரசுக்கு எமது எதிர்ப்பைக் காட்டலாம்.
3. நம்மில் எதற்கும் துணிந்த துணிச்சல் மிக்கவர்களை உள்ளடக்கிய அமைப்பொன்று உருவாக்கப்படுதல் வேண்டும். அது இஸ்லாததிற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தீய சக்திகள் தலை தூக்கும் வேளைகளில் எல்லாம் உடனுக்குடன் களமிறங்கி ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடாத்துதல் வேண்டும்
4. அந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டு அதன் ஸ்தீரத் தண்மை பாதுகாக்கப்படுவதுடன் காவல் துறையின் முழுமையான பாதுகாப்பு கிடைக்கப்பெறச் செய்ய வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை நமது அரசியல் தலைமைகள் முன் நின்று செய்து தரல் வேண்டும்.
5. இவைகளும் வெற்றியளிக்காவிட்டால் அடுத்தகட்ட நகர்வாக அறப்போர்தான் என்றால் அதற்கும் நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இருபது இலட்ச்சம் நம் ஈமானிய சகோதரர்களின் உயிர் உடமைகள் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படவும் அவையனைத்துக்கும் மேலாக இஸ்லாம் இப்பூமியில் உயிர்வாழவும் ஒரு சில உயிர்கள்தான் உரமாக்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டால் அதனையும் நாம் ஆர்வத்தடன் மனமுவந்து அல்லாஹ்விற்க்காக ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஒரு இஸ்லாமியனுடைய இலட்ச்சியமும் ஷஹாதத் எனும் வீர மரணம்தான்
இவைகள் அனைத்தம் எனது ஆலோசனைகளேத் தவிர தீர்மானம் அல்ல. முயற்ச்சி செய்து முடியாமல் போவது முயற்ச்சியே செய்ய முடியாது போவதைவிட சிறந்ததாகும் என்றே கருதுகின்றேன்.
முனாப் நுபார்தீன்.
.jpg)
nalla karuthukkal islathukku ethiraka kafirkal seyatpadumpothu jihath saivathu ovvoru muslimin kadamai akum
ReplyDeleteஜஸாக்கல்லாஹு கைர் இதை அதிகமாக பகிருங்கள்
Delete