6542.4 மில்லியன் ரூபா செலவில் இலங்கையில் மிகப்பெரிய மருத்துவமனை
சிறிலங்காவின் மிகப்பெரிய மருத்துவமனையான, இராணுவ மருத்துவமனையை நாளை மறுநாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திறந்து வைக்கவுள்ளார்.
நாரஹேன்பிட்டியில் 10 மாடிகளைக் கொண்டதாக இந்த இராணுவ மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
6542.4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையே சிறிலங்காவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையாகும்.
இந்த இராணுவ மருத்துவமனை 1024 படுக்கைகளைக் கொண்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்காவின் மிகப்பெரிய மருத்துவமனையாக விளங்கிய சிறிஜெயவர்த்தனபுர தேசிய மருத்துவமனை 1021 படுக்கைகளை மட்டுமே கொண்டதாகும்.
இந்த மருத்துவமனையில் சிறிலங்காவின் முப்படையினர், அவர்களின் குடும்பத்தினர், போரில் உயிரிழந்த படையினரின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் படையினருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
20 விடுதிகளைக் கொண்ட இந்த இராணுவ மருத்துவமனையில், 9 சத்திரசிகிச்சைக் கூடங்களும், அனைத்து நவீன மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக் கூடங்களும், அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மருத்துவமனையின் மேற்தளத்தில் உலங்குவானூர்தி இறங்கும் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment