Header Ads



யாழ்ப்பாணத்தில் 3 பேர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் -  அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவரும் இனந்தெரியா நபரிகளினால் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (04) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிக்கோநாதன் அருள்நாயகி(50), யாசோதரன் மதுசா(27), நிக்கோநாதன் சுபாங்கன்(19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், நிக்கோநாதன் தர்மிகா (25), க. யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை எவ்விதமான உயிராபத்துகளும் இன்றி தப்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.