புத்தரின் உருவத்தினை பச்சை குத்திக்கொண்டு இலங்கைக்கு வந்த பிரான்ஸ் பெண்களை நாடுகடத்த உத்தரவு
புத்த பெருமானின் உருவத்தினை உடலில் பச்சை குத்திக் கொண்டு நாட்டுக்குள் பிரவேசித்த பிரான்ஸ் நாட்டு பெண்கள் இருவரை நாடுகடத்துமாறு நீர்கொழும்பு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அந்த பெண்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார்.
மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்கள் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது விமான நிலைய பொலிஸாரால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் இந்த பெண்கள் வருகை தந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Foreigners have tattoos with the intention of beauty, art. If it was Buddah's image, it is not to insult him rather respect him. If it is the law, then advertize it in your foreign ministry's web site.
ReplyDelete